text
stringlengths
8
614k
சுதந்திரம் என்பது சிறைப்படுத்தப்படாத, அடிமைப்படுத்தப்படாத, வலிந்து தடுகாத நிலையாகும்.இது குறித்த மேற்கோள்கள் வாழ்க்கை என்பது என்ன? வெளியே கற்றி நடப்பதும். நல்ல காற்றைச் சுவாசிப்பதும், உயரே சூரியனைப் பார்ப்பதும் அன்று. சுதந்தரமாயிருப்பதே வாழ்க்கை. அடிஸன் மனித சமுகம் எப்பொழுது மிக அதிகமான அளவில் சுதந்தரம் பெற்றுள்ளதோ, அப்பொழுதுதான் உச்ச நிலையில் விளங்கும். தாந்தே சுதந்தரம் மனித சமூகத்தின் கதியை நிர்ணயிப்பது. உலகில் எந்த அளவில் அது வெற்றி பெற்று வளர்கின்றதோ, அந்த அளவுக்கு அது சுதந்தரம் விரும்புவோர் அனைவருக்கும் உதவியாகும். கோஸத் மக்கள் தேர்ந்தெடுக்கும் அரசாங்கத்தைத் தவிர வேறு எதுவும் பூமியில் இருப்பதற்கு நியாயம் கிடையாது. ஜோஸப் போனபார்ட் சுதந்தரமாயுள்ள மக்கள் அந்தச் சுதந்த்ரத்தைத் தங்கள் குழந்தைகளுக்கும் அளிப்பதே தலைசிறந்த பெருமையாகும். ஹாவர்டு நான் சுதந்தரத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கிறேன். சமூக சுதந்தரம். பொருளாதார சுதந்தரம். குடும்ப சுதந்தரம். அரசியல் சுதந்தாம். அறிவுச் சுதந்தரம் ஆன்மிகச் சுதந்தரம், அனைத்தும் அவசியம், எல்பர்ட் ஹப்பர்ட் சமய சுதந்தரம், பத்திரிகை சுதந்தரம். சட்டத்தின் மூலம் தனி மனிதவின் உடற்காப்புக்குச் சுதந்தரம் ஆகிய தத்துவங்களே, புரட்சியும் மறுமலர்ச்சியும் நடந்து வந்த காலத்தில் நமக்கு வழிகாட்டிகளாயிருந்து வந்தன. ஜெஃபர்ஸன் சட்டத்திற்கு உட்பட்டு அமையும் சுதந்தரமே உண்மையான சுதந்திரம் பர்டன் தனி மனிதனின் சுதந்தரம் மனிதனின் பெருமைக்கும் இன்பத்திற்கும் அவசியமாகும். புல்வர் மற்ற சுதந்தரங்களைக்காட்டிலும் எனக்கு அறிவு பெறவும், சிந்தனை செய்யவும், நம்பிக்கை கொள்ளவும், மனச்சாட்சியின்படி நினைத்ததைப் பேசவும் உரிமை தேவை. மில்டன் எங்கே சுதந்தரம் உளதோ, அது என் நாடு. மில்டன் சுதந்திரமாயிருக்க வேண்டுமென்று உறுதிகொண்ட மக்கள்மீது அடிமைத்தனத்தைச் சுமத்தப் பார்ப்பதைவிட மலையை அடியோடு பெயர்த்தெறிவது எளிது. ஸதே மனித உடலுக்கு ஆரோக்கியத்தைப் போல், சமூகத்திற்குச் கதந்திரம் தேவை. கௌவி சுவர்க்கத்திலே என்னைச் சிறை வைத்தாலும், நான் அதன் பளிங்கு, சுவர்களைத் தாண்டி வெளியேறவே விரும்புவேன். எனக்கு கதந்தரமே தேவை. டிரைடன் சுதந்திரம், சமத்துவம் ஆகிய கொள்கை வெறும் சுய நலத்தோடு சேர்ந்திருந்தால், மனிதர்களைப் பேய்களாக்கிவிடும். ஒவ்வொருவனும் சுதந்தரமாகி, தன் சுயநலத்திற்காக மட்டும் போராடிக்கொண்டிருப்பான். இங்கேதான் சமயமும். அதன் ஆற்றலும் தேவைப்படுகின்றன. அவை மனிதர்க்கு அன்பையும் பரோபகாரச் சிந்தையையும் உண்டாக்கும். ஜான் ராண்டோல்ஃப் உண்மையான சுதந்தரம் என்பது நம் உரிமைகளை நாம் அனுபவிக்கும் உரிமையாகும் பிறருடைய உரிமைகளை அழிப்பதன்று பிங்கார்ட் சட்டங்கள அனுமதிக்கும் உரிமையே சுதந்தரம். அவை தடுத்துள்ளவைகளை ஒரு பிரஜை செய்தால், அது சுதந்தரமாகாது. ஏனெனில், மற்றவர்களும் அவ்வாறே செய்ய உரிமை கொண்டாடுவார்கள். மாண்டெஸ்கியு சட்டத்துக்கு அடங்கிய சுதந்தரம் அடுப்பிலுள்ள நெருப்பானால், சட்டத்துக்கு அடங்காத சுதந்தரம் தரைமீது பரவிய நெருப்பாகும். ஷில்லாட் சுதந்தரம் ஒரு சமூகத்தை நோக்கி இறங்கி வராது. சமூகமே அதை நோக்கி மேலெழ வேண்டும் அதைச் சிரமப்பட்டு அடைந்து அனுபவிக்கவேண்டும். கோல்டன் சுதந்தரம் இல்லாமல் ஒரு நாடு சிறப்பாக வாழ முடியாது. ரூஸோ குறிப்புகள் பகுப்பு அரசியல்
ஜோசப் நெப்போலியன் போனபார்ட் 7 சனவரி 1768 28 சூலை 1844 என்பவர் ஒரு பிரெஞ்சு வழக்கறிஞரும் இராஜதந்திரியும் ஆவார். இவரது தம்பியான நெப்போலியன் போனபார்ட்டின் இவரை நேபிள்ஸ் மற்றும் சிசிலி மன்னராக ஆக்கினார். மேற்கோள்கள் மக்கள் தேர்ந்தெடுக்கும் அரசாங்கத்தைத் தவிர வேறு எதுவும் பூமியில் இருப்பதற்கு நியாயம் கிடையாது. குறிப்புகள் பகுப்பு 1768 பிறப்புகள் பகுப்பு 1844 இறப்புக்கள் பகுப்பு பிரான்சியர்கள்
எல்பர்ட் கிரீன் ஹப்பார்ட் 19 ஜூன் 1856 7 மே 1915 ஒரு அமெரிக்க எழுத்தாளர், வெளியீட்டாளர், கலைஞர், தொழிலதிபர், அரசின்மையர், சுதந்திரவாத சோசலிச தத்துவவாதி ஆவார். மேற்கோள்கள் நான் சுதந்தரத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கிறேன். சமூக சுதந்தரம். பொருளாதார சுதந்தரம். குடும்ப சுதந்தரம். அரசியல் சுதந்தாம். அறிவுச் சுதந்தரம் ஆன்மிகச் சுதந்தரம், அனைத்தும் அவசியம். குறிப்புகள் பகுப்பு 1856 பிறப்புக்கள் பகுப்பு 1915 இறப்புக்கள் பகுப்பு அமெரிக்கர்கள்
சுருங்கச் சொல்லல் குறித்த மேற்கோள்கள் சுருங்கச் சொல்வதே பேச்சுத் திறனின் உயிர்நாடி ஷேக்ஸ்பியர் சட்டமன்ற உறுப்பினராயினும் சரி. பேச்சாளராயினும் சரி. ஒருவரின் பேச்சு சுருக்கமாயிருக்க வேண்டும். ஸிஸரோ குறிப்புகள் பகுப்பு உரையாடல்
சொர்க்கம் என்பது நல்லது செய்தவர் இறந்தபின் செல்லும் ஒரு இன்ப இடமாக பல சமயங்களில் நம்பப்படுகிறது. மேற்கோள்கள் நான் எப்பொழுதாவது சுவர்க்கத்திற்குச் செல்ல நேர்ந்தால், அங்கே மூன்று அதிசயங்களைக் காண்பேன். முதலாவது, அங்கேயிருக்கமாட்டார்கள் என்று நான் கருதிய சிலர் இருப்பார்கள் இரண்டாவது. அங்கேயிருப்பார்கள் என்று நான் கருதிய சிலர் இருக்க மாட்டார்கள் மூன்றாவது பெரிய ஆச்சரியம் என்னவென்றால், நான் அங்கேயிருப்பது. ஜான் நியூட்டன் பேரின்பத்தை விரும்புபவன் பேரின்பமயமாக இருப்பான். ஷேக்ஸ்பியர் பூமிக்கு வானம் வெகு தொலைவிலுள்ளது. வானத்திற்குப் பூமி மிக அருகிலுள்ளது. ஹேர் நடந்தால் கவர்க்கத்தை அடையலாம். பேச்சால் முடியாது. எம். ஹென்றி நாம் சுயநலத்திலிருந்தும், பாவமான உலகிலிருந்தும் எவ்வளவு விலகியிருக்கிறாமோ. அவ்வளவு சுவர்க்கத்தின் அருகில் இருக்கிறோம். ரூதர்ஃபோர்டு குறிப்புகள் பகுப்பு நம்பிக்கைகள்
எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு , ஆகஸ்ட் 30, 1871 அக்டோபர் 19, 1937 நியூசிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற, முன்னோடியான அணு இயற்பியல் அறிஞர் ஆவார். அணுவின் அமைப்பை ஆய்வு செய்ததோடு மட்டுமன்றி அணுவைப் பிளக்க இயலும் என்னும் கருதுகோளுக்கும் அடித்தளம் நாட்டியவர். மேற்கோள்கள் நாம் சுயநலத்திலிருந்தும், பாவமான உலகிலிருந்தும் எவ்வளவு விலகியிருக்கிறாமோ. அவ்வளவு சுவர்க்கத்தின் அருகில் இருக்கிறோம். குறிப்புகள் பகுப்பு இயற்பியலாளர்கள் பகுப்பு 1871 பிறப்புக்கள் பகுப்பு 1937 இறப்புக்கள்
சுறுசுறுப்பு குறித்த மேற்கோள்கள் சோம்பலால் துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத தேய்வது மேல். கம்பர்லந்து சோம்பல் எல்லா விஷயங்களையும் கஷ்டமாக்கும் சுறுசுறுப்பு எல்லாவற்றையும் எளிதாக்கும். ஃபிராங்க்லின் சுறுசுறுப்பு. கடன்களை அடைக்கும். சோம்பலும் கருத்தின்மையும் கடன்களைப் பெருக்கும். ஃபிராங்க்லின் குழந்தைகளுக்குச் சுறுசுறுப்பான பழக்கங்களை அளிப்பவன் சொத்து அளிப்பதைவிட மேலாகும். வேட்லி தேனீயைப் போல, நமது வேலையை நாம் இன்பமயமாக்கிக கொள்வோம். கோல்டுஸ்மித் எவ்வளவு அதிகமாக நாம் வேலை செய்கின்றோமோ அவ்வளவுக்குக் கூடுதலாக வேலைசெய்ய முடியும் எவ்வளவு சுறுசுறுப்பாயிருக்கின்றோமோ, அவ்வளவு அதிகமான ஓய்விருக்கும். ஹாஸ்லிட் அறிவைப் பெருக்கிக்கொள்வதற்கு கருத்துடைமை என்ற விலையைச் செலுத்த வேண்டும். அறுவடை செய்ய வேண்டுமானால், முன்னால் விதைகளை விதைத்திருக்க வேண்டும். பெய்லி மனிதன் தானாக உழைத்துப் பழகிக் காய்த்துப் போயிருக்க வேண்டும். இன்ப நுகர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்திருக்கக் கூடாது. அவை உடலுக்கும் நன்மை செய்வதில்லை. மனத்தின் அறிவுக்கும் உதவுவதில்லை. சாக்ரடீஸ் குறிப்புகள் பகுப்பு கருப்பொருட்கள்
சூதாட்டம் என்பது, பணம் அல்லது வேறு பெறுமதியான பொருட்களைப் பணயமாக வைத்து ஆடுகின்ற, நிச்சயமற்ற விளைவைக் கொடுக்கக்கூடிய ஒரு விளையாட்டு வகை ஆகும். மேற்கோள்கள் சூதாடும் கருவியைக் கையிலெடுத்துக்கொண்ட கணத்திலிருந்தே ஒரு மனிதனை. அவன் தற்கொலை செய்து கொள்பவன் என்றே நான் கருதுகிறேன் பின்னால் நேருவதெல்லாம் அவன் தன் நெஞ்சிலே குத்திக்கொள்ள உடைவாளைத் தீட்டுவதாகும். கம்பர்லந்து பகடை உருட்டும் ஓசையைக் கேட்கும் போதெல்லாம். நான் குடும்பம் முழுவதற்கும் சாவுமணி அடிக்கும் ஓசையைக் கேட்கிறேன். ஜெரால்டு சீட்டு, பகடை சரக்குகள் ஆகிய எத்தகைய சூதாட்டமாயினும், ஒன்றுதான். அது பணத்திற்குப்போதிய ஈடு செலுத்தாமல் பணம் பெறுவதாகும். பீச்சர் சூதாட்டத்தில் மனிதனுடைய வாழ்க்கையில் மிகவும் அருமையான காலத்தையும், செல்வத்தையும் நாம் இழக்கிறோம். ஃபெல்ட்ஹாம் சணலை நெருப்பிலிருந்து தொலைவில் வைக்கவும் இளைஞனைச் சூதாட்டத்திலிருந்து ஒதுக்கி வைக்கவும். ஃபிராங்க்லின் குறிப்புகள் பகுப்பு விளையாட்டுகள் பகுப்பு தீயொழுக்கங்கள்
சூழ்நிலைகள் என்பது ஒரு நிகழ்வை ஒருவிதத்தில் பாதிக்கும் விஷயங்கள் ஆகும். மேற்கோள்கள் ஒருவன் சூழ்நிலைகளைத் தொடர்ந்து. தன்னைச் சுற்றியுள்ள சக்திகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரே வார்த்தையில் சொன்னால், செய்யத்தக்கதைச் செய்யவேண்டும். அனடோல்ஃபிரான்ஸ் பெரும்பாலான ஆடவரும் பெண்டிரும் வாழ்க்கையில் தங்களுக்குக் கிடைக்கும் வழியிலேயே செல்கின்றனர்.அவர்கள் தங்கள் அனுபவங்களை ஆராய்ந்து தெரிந்துகொள்ள ஆசையோ ஓய்வோ பெற்றிருக்கவில்லை. சிலர் மட்டுமே மிக சிறந்த அனுபவ இலாபங்களை அடையத்தக்க பாதைகளை அமைத்துக்கொள்கின்றனர். ஸர் ஆர்தர்கீத் சூழ்நிலைகள் பலவீனமானவர்களுக்கு எஜமானர்கள் அறிவாளர்களுக்கு அவை கைக்கருவிகள். சாமுவேல் லோவர் சூழநிலைகள்! நானே சூழ்நிலைகளை அமைத்துக் கொள்கிறேன். நெப்போலியன் காலத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நடக்கிறவர்கள் தாம் செயல்களில் வெற்றி காண்பார்கள். நிக்கோலோ மாக்கியவெல்லி குறிப்புகள் பகுப்பு கருப்பொருட்கள் பகுப்பு காலம்
தவறுக்கு வருந்துதல் என்பது குறித்த மேற்கோள்கள் தவறு செய்ததற்கு வருந்துதலே மனிதனுடைய செயல்களுள் மிகவும் தெய்விகமானது. கார்லைல் மேற்கொண்டு அவ்வாறு தவறு செய்யாமலிருத்தலே உண்மையான இரங்குதலாகும். லூதர் இரங்குதல் இதயத்தின் சோகம். அதிலிருந்து தூய வாழ்க்கை தொடங்குகின்றது. ஷேக்ஸ்பியர் தடுக்கி விழாமலே இருப்பதில் நமக்குத் தலைசிறந்த பெருமையில்லை. ஆனால், நாம் விழுந்த பொழுதெல்லாம் மீண்டும் எழுதலில் இருக்கின்றது. கோல்டுஸ்மித் குறிப்புகள் பகுப்பு நல்லொழுக்கங்கள்
செய்தி என்பது ஒரு சம்பவம் அல்லது நிகழ்ச்சி பற்றிய தொகுப்பை அதை நேரில் அனுபவிக்காதவர்களை கருத்திற் கொண்டு அவர்களுக்கு அறியப்படுத்துவது' என்பது அதன் வரைவிலக்கணப்படுத்துகின்றது. மேற்கோள்கள் செய்திகள் ஒரு நாளின் இனிய் உணவு. கிரீஸ் காலைக் காற்றைப் போலச் செய்திகள் வரவேற்கத்தக்கவை. சாப்மன் கெட்ட செய்தி சிறகடித்துப் பறந்து செல்கின்றது. டிரைடன் குறிப்புகள் பகுப்பு உரையாடல் பகுப்பு ஊடகவியல்
செய்முறை அல்லது செயல்முறை என்பது குறித்த மேற்கோள்கள் செய்யத்தக்க காரியமெல்லாம் நல்ல முறையில் செய்யத்தக்கவையே. செஸ்டர்ஃபீல்ட் நேர்த்தியாகச் செய்து முடிப்பதோடு உன் வேலை தீர்ந்தது. உன்னைப்பற்றிப் பேசுவதை மற்றவர்களுக்கு விட்டுவிடு. பிதாகோரஸ் நன்றாகச் சிந்தனை செய்தல் புத்திசாலித்தனம். நன்றாகத் திட்டமிடுதல் மேலும் அறிவுடையதாகும். நன்றாகச் செய்து முடிப்பது எல்லாவற்றினும் சிறந்ததாகும். பாரசீகப் பழமொழி குறிப்புகள் பகுப்பு கருப்பொருட்கள்
செலவு என்பது வரவு பணத்தை செலவு செய்யும் வழி அகும், அல்லது பிற பொருள்களை பணத்தை கொண்டு வாங்கும் முறை ஆகும். ஒரு தீமைக்கு இடம் கொடுத்தால். அது இரண்டு குழந்தைகை அழைத்து வரும். கொஞ்சம் தேநீர் அல்லது கொஞ்சம் பழச்சாறு ஆகியவற்றை இடையிடையே குடித்து வரலாம் என்றும், சற்றுக் கூடுதலான விலைமதிப்புள்ள உணவை அருந்தி வரலாம் என்றும். சற்று உயர்ந்த ஆடைகளை அணியலாம் என்றும் கொஞ்சம் தமாஷாக்கள் பார்த்து வரலாம் என்றும் நீங்கள் ஒருவேளை எண்ணலாம். இவை பெரிய விஷயங்கள் அல்ல என்றும் கருதலாம். ஆனால், 'பலதுளி பெருவெள்ளம் என்பது நினைவிருக்கட்டும். சின்னச் சின்னச் செலவுகளில் எச்ரிக்கையாக இருங்கள். ஒரு சிறு துவாரம் இருந்தாலும், அது பெரிய கப்பலை மூழ்கச் செய்துவிடும். ஃபிராங்க்லின் உனக்கு அவசியமில்லாத பொருள்களை விலைக்கு வாங்கு சீக்கிரத்தில் உனக்கு இன்றியமையாத பொருள்களையும் விற்க நேரிடும். ஃபிராங்க்லின் குறிப்புகள் பகுப்பு பொருளியல்
ஆண்ட்ரூ கார்னேகி அல்லது ஆண்ட்ரூ கார்னெகீ, , நவம்பர் 25, 1835 ஆகத்து 11, 1919 ஐக்கிய அமெரிக்காவில் வாழ்ந்த புகழ் பெற்ற கைத்தொழில் அதிபரும் கொடைவள்ளலுமாவார். அவரது நன்கொடையினால் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு கல்வி மற்றும் கலை நிறுவனங்கள் இன்றும் மகத்தான சேவையைப் புரிந்து வருகின்றன. மேற்கோள்கள் இறக்கும்போது செல்வனாக இறப்பது கேவலம் என்று பொதுவான உணர்ச்சி ஏற்படும். துறப்பதுதான் இன்பத்தின் இரகசியம். யுத்த தளவாடங்களைப் பெருக்க வேண்டுமென்று கூறுவோர்களுக்கு இரக்கப்பட்டு, நாம் அவர்களை மன்னிப்போம். ஏனெனில், அவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம். என்பதை அறியார்கள் நிலையான கருத்துடன் இருத்தல் என்பது என்னுடைய இலட்சிய வாக்கியம். முதலில் யோக்கியதை, பிறகு சுறுசுறுப்பு. பிறகு நிலையான கருத்துக்கொள்ளல். குறிப்புகள் பகுப்பு அமெரிக்கர்கள் பகுப்பு 1835 பிறப்புக்கள் பகுப்பு 1919 இறப்புக்கள் பகுப்பு மெய்யியலாளர்கள்
ஒரு நபரின் எண்ணங்கள் அல்லது செயல்களால் மற்றவர்கள் பாதிக்கப்படும்போது சமூக செல்வாக்கு ஏற்படுகிறது. உலகை ஆட்டிவைக்க விரும்புவோன் முதலில் தன்னை இயக்கி வைத்துக்கொள்ள வேண்டும். சாக்ரடீஸ் மனிதர்களை வசப்படுத்துவது. அவர்களைக் குறை சொல்வதாலன்று. அவர்களை அன்பினால் அரவணைத்துக் கொள்வதால் இயலும். சான்னிங் பேரறிவும் புனித வாழ்வும் உலகம் வெளியிடும் சிந்தனைகள். உலகை மாற்றிவிடுகின்றன. எமர்ஸன் ஒருவருடைய குணம் வெளியே பரிமளிப்பது செல்வாக்கு. டெயிலர் மிகுந்த அனுதாபமில்லாத இடத்தில் சொற்பச் செல்வாக்குதான் இருக்கும் எஸ். ஐ. பிரைம் மற்றவர்களுடைய அரிய சொற்பொழிவுகளைக்காட்டிலும், நல்லவர்களுடைய ஒரு சொல் அல்லது தலை அசைப்பு அதிகச் செல்வாக்குடையது. புளுடார்க் மிகச் சொற்பமான அசைவும் இயற்கை அனைத்திற்கும் முக்கியமாகும். ஒரு சிறு கல் விழுந்தாலும் அது சமுத்திரம் முழுவதையும் பாதிக்கும். பாஸ்கல் குறிப்புகள் பகுப்பு சமூகவியல்
செழுமை என்பது குறித்த மேற்கோள்கள் செழுமை நற்பண்பின் உரைகல். ஏனெனில், இன்பத்தால் நலிவடையாமல் இருப்பதைவிடத் துன்பங்களைத் தாங்குதல் அதிகக் கஷ்டம். டாஸிடஸ் உலகில் எதையும் தாங்கலாம்.இடைவிடாத செழுமையை மட்டும் தாங்குதல், அரிது. கதே வறுமை ஆயிரக்கணக்கானவர்களை வதைத்திருந்தால், செழுமை பல்லாயிரக்கணக்கானவர்களை வதைத்துள்ளது. ஆதலால், வறுமையே மேலெனக் கொள்ளத்தக்கது. பர்டன் குறிப்புகள் பகுப்பு செல்வம்
ஹென்றி கிளே 12 ஏப்ரல் 1777 29 சூன் 1852 என்பவர் ஒரு முதன்மை அமெரிக்க அரசியல்வாதி மற்றும் சொற்பொழிவாளர் ஆவார். இவர் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் இரண்டிலும் பணியாற்றினார். மற்றவர்களை உடன்படிக்கைக்கு கொண்டுவரும் திறனுக்காக "தி கிரேட் காம்பிரமைசர்" மற்றும் "தி கிரேட் பேஸிஃபையர்" என்று அழைக்கப்பட்ட இவர் விக் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். இவர் பொருளாதாரத்தை நவீனமயமாக்குவதற்கான திட்டங்களை முன்னிலைப்படுத்தியவர். மேற்கோள்கள் உண்மையான பேச்சுத் திறனுக்கு ஈடான ஆற்றலில்லை. ஸீஸர் மக்களின் அச்சங்களைக் கிளறிவிட்டு அவர்களை அடக்கி ஆண்டு வந்தார். ஸிஸரோ அவர்களுடைய அன்பைக் கவர்ச்சி செய்து உணர்ச்சிகளை ஆண்டு வந்தார். ஸீஸரின் செல்வாக்கு அவர் ஆயுளுடன் முடிந்தது. மற்றவருடைய செல்வாக்கு இன்றுவரை தொடர்ந்து நிற்கின்றது. குறிப்புகள் பகுப்பு 1777 பிறப்புக்கள் பகுப்பு 1852 இறப்புக்கள் பகுப்பு அரசியல் தலைவர்கள் பகுப்பு அமெரிக்கர்கள்
சோகம் என்பது மகிழ்ச்சியற்ற, துயரம் அல்லது துக்கம் கொண்ட ஒரு அனுபவமாகும். மேற்கோள்கள் வானுலகால் சாந்தப்படுத்த முடியாத சோகம் எதுவும் பூமிக்கு ஏற்படுவதில்லை. மூர் அதிக வேலையாக அலைபவர்களுக்குக் கண்ணீர் விட நேரமில்லை. பைரன் சோகம் தோன்றினால், வார்த்தைகளால் வெளியிட வேண்டும் பேசாமல் அடங்கியுள்ள கோபம் முறுகிக் கிடக்கும் இதயத்தை உடையச் செய்துவிடும். ஷேக்ஸ்பியர் ஒரு சோகம் தனியே வராமல் ஒரு வாரிசையும் கூட அழைத்துக் கொண்டு வரும். அதற்குப் பின்னால் வாரிசு தலையெடுக்கும். ஷேக்ஸ்பியர் வாழ்க்கையாகிய மணலில் சோகம் பலமாக மிதித்து நடப்பதால், அதன் தடங்கள் பதிந்துவிடுகின்றன. அவைகளைக் காலத்தால் அழிக்க முடிவதில்லை. எச்நில் சோகம் எவ்வளவு அதிகமோ அந்த அளவுக்கு நாவு பேச முடியாது. டால்மாட் சோகத்தோடு அனுபவம் வருகின்றது. நம் நம்பிக்கைகளில் எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென்று கற்பிக்கும் கொடுகையான அறிவும் ஏற்படுகின்றது. இ. கபோரிடா இன்பம் அனுபவித்த பல ஆண்டுகள் சந்தடியில்லாமல் அகன்று விடுகின்றன. ஆனால், சோகம் ஒவ்வொரு நிமிடமாக எண்ணிக் கொண்டு இருக்கின்றது. ஹவார்டு துக்கம் மனிதர்களுக்காக ஏற்பட்டது. விலங்குகளுக்காக அன்று ஆனால், மனிதர் அதிகமாய்த் துக்கம் கொண்டாடினால், அவர்கள் விலங்குகளுக்கு மேலல்லர். செர்வான்டிஸ் அளவுக்கதிகமான சோகம், அளவுக்கதிகமான சிரிப்பைப் போல் மடமையாகும் ஆனால், துக்கமே கொண்டாடாமல் இருப்பது உணர்வில்லாமை ஆகும். ஸெனீகா கண்ணை மறைக்கும் கண்ணீரைக் காலமும் பொறுமையும் காயவைக்கின்றன. பிரெட்ஹார்ட் குறிப்புகள் பகுப்பு உணர்வுகள்
சோம்பல் அல்லது சோம்பேறித்தனம் என்பது ஒரு செயலைச் செய்யும் திறனைக் கொண்டிருந்தாலும் செயல்பாடவோ அல்லது உழைக்கவோ விருப்பமில்லை ஆகும். மேற்கோள்கள் சோம்பல் தீய ஒழுக்கத்தையோ, கெடுதலையோ உண்டர்க்கா விட்டால், பொதுவாக அது துக்கத்தை உண்டாக்கும். ஸிட்னி ஸ்மித் மெலிந்த உள்ளங்களுக்குச் சோம்பல் சரணாலயம் மூடர்களுக்கு அது ஓய்வு நாள். செஸ்டர்ஃபீல்டு வில்லை அதிகமாக வளைத்தால் ஒடிந்துவிடும் மனத்தை வளைக்காமலே விட்டிருந்தால் அதுவும் ஒடிந்துவிடும். பேக்கன் மனிதர்களிலே பதரான சோம்பேறியின் ஆரம்பநடவடிக்கைகள் இப்படியிருக்கும். அவன் மறைவான இடத்தில் சாய்ந்திருக்க விரும்புவான் காரணமில்லாமல் தெரு முனைகளில் நின்று கொண்டிருப்பான் எங்காவது போய்க்கொண்டேயிருப்பான் அல்லது அதற்கடுத்த நாளோ, பல கடமைகளை நிறைவேற்ற வேண்டுமென்று எண்ணம் கொண்டிருப்பான். டிக்கென்ஸ் சோம்பல் உன்னை ஏமாற்றாமல் காத்துக்கொள் ஏனெனில், அதற்கு இன்று ஒரு நாளை கொடுத்தால், அது அடுத்த நாளையும் திருடிக்கொள்ளும். குரோகுவில் சோம்பல் உள்ளத்தின் உறக்கம். வாவெனார்கூஸ் அவனுக்குப் பிறர் உதவியில்லாமல் முடியாது. ஜான்ஸன் தனித்து இயங்கக்கூடிய முறையில் கடவுள் எவனையும் படைக்கவில்லை. ஃபெல்ட்ஹாம் குறிப்புகள் பகுப்பு தீயொழுக்கங்கள் பகுப்பு கருப்பொருட்கள்
சமூகவுடைமை, நிகரமை, சமவுடைமை , சோசலிசம், சோஷியலிசம் அல்லது சோசியலிசம் என்பது ஒரு அரசியல் பொருளியல் கோட்பாடு. உற்பத்திக் காரணிகள் மற்றும் இயற்கை வளங்கள் அரசு அல்லது சமூக கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற கொள்கையை முன்னிறுத்துகிறது. முக்கிய துறைகள் அரசுடைமையாக இருப்பதையும், சமத்துவத்தை அல்லது சம வாய்ப்புக்களை நிலை நிறுத்தும் கொள்கைகளையும், பொது பொருளாதார நீரோட்டத்தின் விளிம்பில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தர உயர்வுக்கு உதவும் வழிமுறைகளையும் வலியுறுத்துகின்றது. மேற்கோள்கள் உலகம் முழுவதிலும் மனித சமுதாய அமைப்பில் சோஷலிஸத் தத்துவம் படிப்படியாக ஊடுருவிப் பாய்ந்திருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதை எவ்வளவு வேகத்தில் அடையலாம் என்பதிலும், முன்னேறிச் செல்வதற்குரிய வழி முறைகள் என்ன என்பதிலுமே கருத்து வேற்றுமைகள் இருக்கின்றன. ஜவஹர்லால் நேரு முதலாளித்துவ அமைப்பு முழுவதும் ஏதாவது ஒருவகையான செல்வம் ஈட்டும் ஆர்வமுள்ள சமூகத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. சோஷலிஸ சமுதாயம் செல்வம் சேர்க்கும் இந்த ஆர்வத்தைக் கைவிட முயற்சி செய்ய வேண்டும். இதற்குப் பதிலாகக் கூட்டுறவை மேற்கொள்ள வேண்டும். ஜவஹர்லால் நேரு குறிப்புகள் பகுப்பு அரசியல் கருத்தியல்கள்
தகுதி என்பது குறித்த மேற்கோள்கள் எத்தகைய தகுதியையும் நெடுங்காலம் மறைத்து வைக்க முடியாது. அது கண்டுபிடிக்கப் பெறும். ஒருவன் அதைத் தானே வெளிக் காட்டிக்கொண்டால்தான், அது குறைவடையும், அதற்குப் போதிய சன்மானம் எப்பொழுதும் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், பிறர் அத்தகுதியை அறிந்தேயிருப்பார்கள். செஸ்டர்ஃபீல்டு தகுதியும் நல்லதிருஷ்டமும் நெருக்கமுள்ளவை என்பதை மூடர்கள் ஒருபோதும் உணர்வதில்லை. கதே குறிப்புகள் பகுப்பு கருப்பொருட்கள்
தத்துவ ஞானம் குறித்த மேற்கோள்கள் தத்துவ ஞானம் எல்லாம் ஆச்சரியத்தில் ஆரம்பித்து, ஆச்சரியத்தில் முடிவடையும். முதல் ஆச்சரியம் அறியாமையின் குழந்தை மற்ற ஆச்சரியம் வணக்கத்தின் தாய். முன்னது நமது அறிவின் பிரசவக் கஷ்டம் இறுதியானது அதன் சுகமரணம். கோல்ரிட்ஜ் நுண்ணிய கருத்துக்கள் உடைமை மட்டுமே தத்துவ ஞானம் ஆகிவிடாது. அறிவு கூறும் வழி நிற்க ஆசை உடைமையே அதன் இலட்சணம். தோரோ ஒரு தத்துவ ஞானியாக இருப்பது நுணுக்கமான கருத்துகளைக் கொண்டிருப்பது மட்டும் அன்று. ஆனால், அறிவை அன்போடு போற்றி, அது காட்டும் வழியில் வாழ்வதாகும். தோரோ வாழும் முறையைக் கற்பிக்கும் வித்தையே தத்துவ ஞானத்தின் இரண்டு முக்கிய லட்சியங்கள் ஆகும். வால்டேர் ஒருவன் யாரிடம் பேசுகின்றானோ அவனுக்குப் பொருள் விளங்காமலும், பேசுகின்ற தனக்குப் பொருள் விளங்காமலும் இருந்தால், பேசுவது தத்துவ சாஸ்திரமாகும். வால்டேர் உண்மையானதைக் கண்டுபிடிப்பதும். நன்மையானதைச் செய்வதும் தத்துவ ஞானத்தின் முக்கியமான இரண்டு நோக்கங்கள். வால்டேர் உண்மையான தத்துவ ஞானம், இல்லாததைச் சிருஷ்டிக்காது, உள்ளதையே நிரூபித்து உறுதி செய்யும். கலின் தவறான அபிப்பிராயத்தை ஒழிப்பதும், அறிவைத் துய்மை செய்வதும், நமது அறியாமையின் ஆழத்தை உறுதி செய்வதுமே தத்துவ ஞானத்தின் தொழில். ஹாமில்டன் தத்துவ ஞானத்தின் லட்சியம் அறம். பீட்டர் பெயின் அறிவின் உதவியின்றி உணர்ச்சி மூலம் நம்பப்படு அவைகளுக்குத் தவறான காரணம் கண்டுபிடிப்பதே தத்துவ சாஸ்திரம். ஆனால் அக்காரணம் காண்பதும் ஓர் உணர்ச்சியே. ப்ராட்லி தத்துவ ஞானத்தை 'அறிவை அறியும் அறிவு' என்பர். ஆனால் உண்மையில் அது அறியாமையை அறியும் அறிவே ஆகும். அல்லது கான்ட் கூறுவதுபோல் அது அறிவின் எல்லையை அறியும் அறிவே ஆகும். மாக்ஸ் முல்லர் தத்துவ ஞானிபோல் பேசுவதும் எழுதுவதும் எளிது ஆனால் அறிவோடு நடப்பது அங்குதான் கஷ்டம் ரைவ ரோல் தத்துவ ஞானிக்குப் பிறர் யோசனைகளைக் கேட்க விருப்பமும், அவற்றைத் தானே ஆராய்ந்து முடிவு கட்ட மன உறுதியும் வேண்டும். உழைப்பும் இருந்து விட்டால் இயற்கையின் ஆலயத்திலுள்ள இரகசிய மண்டபத்தினுள் நுழையவும் எதிர்பார்க்கலாம். பாரடே தத்துவ ஞானம் கற்பது என்பது, 'தான்' சாகத் தயராக்குவதேயன்றி வேறன்று. ஸிஸரோ தத்துவ ஞானத்தை ஆராய்வது ஒருவன் தன்னை மரணத்திற்குத் தயாரித்துக்கொள்வதாகும். ஸிஸரோ தத்துவ சாஸ்திரிகள் உலக விவகாரங்களைப் பற்றித் தர்க்கித்துக்கொண்டிருப்பர். ஆனால் அதற்கிடையில் உலகை நடத்திச் செல்வன பசியும் காதலுமேயாம். ஷில்லர் நமது தத்துவ சாஸ்திரத்தில் நாம் கனவு கண்டும் அறியாத பல விஷயங்கள் விண்ணிலும் மண்ணிலும் உண்டு. வில்லியம் ஷேக்ஸ்பியர் உண்மையான தத்துவ ஞானம் புதிதாக எதையும் கண்டுபிடிப்பதில்லை. அது இருப்பதையே உறுதி செய்து விளக்குகின்றது. கஸின் தத்துவ ஞானம் என்பது வாழ்க்கைக் கலை. புளுடார்க் உண்மையை ஆராயும் கலையே தத்துவஞானம். அரிஸ்டாட்டல் தத்துவ ஞானத்தின் கருத்து உண்மை, சமயத்தின் கருத்து வாழ்க்கை பீட்டர் பேய்ன் தத்துவஞானியின் முதல் கடமை தற்பெருமையைக் கைவிடல். எபிக்டெடஸ் தத்துவ ஞானத்தை மேலெழுந்தால் போலக் கற்றால், அது ஐயங்களை எழுப்பும் தீர்க்கமாக ஆராய்ந்தால் ஐயங்களை நீக்கும். பேக்கன் நீ தததுவ ஞானியாக இரு ஆனால், உன் தத்துவ ஞானத்தின் இடையே மனிதனாகவும் இரு. ஹியூம் குறிப்புகள் பகுப்பு மெய்யியல்
பீட்டர் பெய்ன் , 1380 1455 ஒரு ஆங்கில இறையியலாளர், இராஜதந்திரி, லோலார்ட் மற்றும் தபோரைட் ஆவார். மேற்கோள்கள் தத்துவ ஞானத்தின் கருத்து உண்மை, சமயத்தின் கருத்து வாழ்க்கை. குறிப்புகள் பகுப்பு ஆங்கிலேயர்கள்
தருக்க நூல் சமயக் கருத்துகளை உயர்ந்தது தாழ்ந்தது எனக் காட்டி வாதிடும் நூல்கள் உண்மை கிணற்றுள் இருக்கிறது என்று முன்காலத்தில் சொல்வது வழக்கம் தருக்க நூல் அந்தக் கிணற்றுள் அமைந்த படிக்கட்டு என்று நாம் சேர்த்துச் சொல்லலாம். வாட்ஸ் ஒழுக்கம் ஆன்மாவை நலமுறச் செய்யும். ஆனால், தருக்க நூல் அறிவின் ஆயுதசாலை, அதில் தாக்குவதற்கும் தற்காப்புக்கும் உரிய எல்லா ஆயுதங்களும் இருக்கும். ஃபுல்லர் குறிப்புகள் பகுப்பு மெய்யியல் பகுப்பு இலக்கியங்கள் பகுப்பு கல்வியியல்
தவறுகள் தவிர்க்க முடியாத நிகழ்வுகள், ஒரு மனிதர் தற்செயலாக தீவாய்ப்பு ஏற்படக்ககூடிய ஒன்றைச் செய்துவிடுகிறார். மேற்கோள்கள் எந்த மனிதனும் தவறு செய்யக்கூடும் ஆனால், முட்டாளை, தவிர வேறு எவனும் அதைத் தொடர்ந்து செய்ய மாட்டான். ஸிஸரோ எந்த மனிதனும் பல தவறுகளையும். பெரிய தவறுகளையும் செய்யாமல் பெருமையுடையவனாகவோ, நல்லவனாகவே ஆனதில்லை. கிளாட்ஸ்டன் குற்றமே செய்யாமல் இருப்பவர்கள் இறந்து போனவர்களே. லேலண்ட் விஞ்ஞானம் முழுவதிலும் தவறுதான் உண்மைக்கு முன்னால் செல்லும். உண்மைக்குப் பின்னால் கடைசியாக நிற்காமல், அது முன்னால் போவதே நலம். வால்போஸ் கீழே விழாமல் இருத்தல் நமக்குப் பெரிய பெருமையன்று ஆனால், விழுந்த பொழுதெல்லாம் எழுந்திருத்தலே பெருமை. கன்ஃபூஸியஸ் தெரியாமல் செய்த பிழைக்கு நாம் அனுதாபம் காட்ட வேண்டும். ஏளனம் செய்யக்கூடாது. செஸ்டர்ஃபீல்ட் குறிப்புகள் பகுப்பு கருப்பொருட்கள்
தற்கொலை என்பது விருப்பத்துடன் ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்ளும் செயலாகும். மேற்கோள்கள் தானாகச் சாகத் துணிந்தவன் தைரியமுள்ளவன் துக்கத்தைத் தாங்குபவனே வீரன். மாஸிங்கர் தற்கொலை, கோழைத்தனத்திலிருந்து சில சமயங்களில் உண்டாகிறது ஆனால், எப்பொழுதும் அல்ல அநேகர் சாவதற்கு அஞ்சி உயிர் வாழ்கின்றனர். அநேகர் வாழ்வதற்கு அஞ்சி உயிரை விடுகின்றனர். கோல்டன் குறிப்புகள் பகுப்பு கருப்பொருட்கள்
தற்புகழ்ச்சி என்பது தன்னைப் பற்றியும், தன் செயல்களை பற்றியும் தானே புகழ்நுதுரைப்பது ஆகும். மேற்கோள்கள் ஒருவன் தன்னைப்பற்றி அதிக உயர்வாக எண்ணுவதும். அதிகத் தாழ்வாக எண்ணுவதும், இரண்டுமே தவறுதான். கதே இருபது அறிஞர்களுள் ஒருவர்கூட தம்மைத் தாமே புகழ்ந்து பேச மாட்டார். ஷேக்ஸ்பியர் ஒருவன் புகழை மற்றவர் புகழ்ந்தால் இசைபோல் இருக்கும். ஆனால், அவன் தானே புகழ்ந்துகொண்டால் கேட்க வெறுப்பாயிருக்கும். ஸெனஃபோன் குறிப்புகள் பகுப்பு உரையாடல்
தனிப் பெருமை குறித்த மேற்கோள்கள் தனிப் பெருமையுடையவர்களை எல்லா இடங்களிலும் தனியாக விட்டுவிட்டு மரியாதை செய்ய வேண்டும். அவர்களே நன்மைகளுக்கெல்லாம் வேராவர். ரிச்டெர் வெளியே உள்ளவைகளெல்லாம் ஒருனைப் பயனற்றவன் என்று கூறுகின்றன. ஆனால், அவனுள்ளே உள்ளவைகளெல்லாம் அவனே எல்லாப் பயன்களுமுள்ளவன் என்று தூண்டுகின்றன. டௌடன் குறிப்புகள் பகுப்பு கருப்பொருட்கள்
நம்பாமை என்பது நமிபிக்கை பற்றாகுறை. குறிப்பாக சமயம் முதலிய கோட்பாடுகளை நம்பாமை. இது குறித்த மேற்கோள்கள் நம்பாதிருக்கும் உணர்ச்சி ஒரு பெரிய உள்ளத்திற்குக் கடைசியாகவே வரும். ராஸீன் நம்பாமையைவிட அதிகத் தனிமையான தனிமை வேறு எது? ஜியார்ஜ் எலியட் குறிப்புகள் பகுப்பு நம்பிக்கைகள் பகுப்பு சமயம்
நம்பிக்கை இழத்தல் என்பது குறித்த மேற்கோள்கள் நம்பிக்கையிழப்பவன் தன் சிறு அளவுகோலைக்கொண்டு எல்லையற்ற சக்தியாகிய பரம்பொருளை அளந்து பார்ப்பவன். ஸவுத் இந்த உலகின் எதிர்பாராத நிகழ்ச்சிகளைக் கருதி, மனிதர்கள் எந்த நிலையிலும் நம்பிக்கையை முழுதும் இழக்க வேண்டியதில்லை என்று நாம் கற்பிக்கப்பெற வேண்டும். ஃபீல்டிங் நம்பிக்கையின்மை, நரகத்தின் ஈர வாடை இன்பம், சுவர்க்கத்தின் தெளிவான ஒலியுள்ளது. டோன் நம்பிக்கையிழத்தல் அச்சம். சோம்பல் ஆத்திரம் ஆகியவற்றின் குழந்தை உற்சாகம். உறுதி ஓரளவு நேர்மை ஆகியவற்றிலுள்ள குறைபாடே. அதற்குக் காரணம். குறிப்புகள் பகுப்பு நம்பிக்கைகள்
புதினம் அல்லது நாவல் என்பது மக்களால் பரவலாக விரும்பப்படும் ஒரு இலக்கிய வடிவம் ஆகும். சிறுகதையைப்போன்று அல்லாமல் இது நீண்டதாக இருக்கும். மேற்கோள்கள் நவீனங்களும், புதுமைக் கதைகளும் எழுதுவதற்குக் காகிதம் பேனா, மை ஆகியவற்றுடன், அவைகளை உபயோகிக்கும் உடல் வலிமையும் தவிர, வேறு எதுவும் தேவையில்லை. ஃபீல்டிங் நாவல்கள் இனிமையாயிருக்கின்றன. நல்ல இலக்கிய ருசியுள்ள எல்லா மக்களும் அவைகளை விரும்புகிறார்கள். அநேகமாக எல்லாப் பெண்டிரும் புத்திசாலிகளான கடின இதயமுள்ள மனிதர்களும் நாவலை விரும்புகிறார்கள். நீதிபதிகள், பிஷப்புகள், அமைச்சர்கள், கணித நிபுணர்கள் ஆகியோர்கள் நாவல் படிப்பதில் பிரசித்தமானவர்கள். சிறு பையன்களும் இனிய பெண்களும், அவர்களுடைய அன்பும் அருமையுள்ள தாய்மார்களும் அவைகளைப் படிக்கிறார்கள். தாக்கரே மனித இயற்கையின் பெருமையைக் காப்பதற்கும் உயர்த்துவதற்கும் கொஞ்சம் புதுமையான கதை கேடொன்றும் செய்துவிடாது. அது இல்லாவிடில், மனித இயற்கை இழிவான தீமையான, தாழ்ந்த விஷயங்களில் இறங்கிவிடக்கூடும். ஸ்விஃபட் நாம் இன்புறவும். பொழுது போக்கவும் புத்தகங்கள் வேண்டும் அதே போல, அறிவு பெறவும், தொழில் செய்யவும் புத்தகங்கள் வேண்டும். முதலாவது புத்தகங்கள். விரும்பிப் படிக்கக்கூடியவை. பின்னவை. பயனுள்ளவை, மனித உள்ளத்திற்கு இரண்டு வகையுமே தேவை பால்ஜாக் எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுடைய மகன் புதுமைக் கதையான ஒரு நாவலைத் தீண்டிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கோல்டுஸ்மித் இப்பொழுது வெளிவரும் நவீனங்களுள் முக்கால் பகுதி அறிவை நலிவுறச்செய்து கற்பனையைக் குன்றச் செய்து உருசியையும் நடையையும் கொச்சையாக்கிவிடுகின்றன. வாழ்க்கையையும் மனித இயற்கையையும்பற்றி உண்மைக்கு மாறான கருத்துகளை அளிக்கின்றன எல்லாவற்றிற்கும் மேலாக, அறிவு வளர்ச்சிக்குரிய அருமையான நேரத்தை வீணாக்குகின்றன. ஜி. லெட்டர்ஸ் சிறந்த முறையில் அமைந்த நாவல், நாகரிகத்தை வளர்ப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட உயர்ந்த கருவிகளுள் ஒன்றாகும். ஸர். ஜே. ஹெர்ஸ்செல் நாவல்கள் தங்கள் வாசகர்களைப் பாவம் செய்யத் தூண்டுவதில்லை. ஆனால், எப்படிச் செய்யவேண்டும் என்பதை மட்டும் அவர்களுக்குக் கற்பிக்கின்றன. ஸிம்மர்மன் குறிப்புகள் பகுப்பு இலக்கியங்கள் பகுப்பு புதினங்கள்
நன்மை செய்தல் குறித்த மேற்கோள்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நன்மை செய்தலே உண்மையான இன்பம் அளிக்கும் செயல்.ஸர். பி. ஸிட்னி துன்பத்தைக் கண்டு இரங்குதல் மனித இயல்பு அதை நீக்குதல் தெய்விகமாகும். எமர்ஸன் நாம் பிறருக்கு அளிக்கும் இன்பத்திலேயே நமக்கு மகிழ்ச்சி இருக்கின்றது. டுமாஸ் மனிதர்கள் தங்களுடன் சேர்ந்த மற்ற மனிதர்களுக்கு நன்மை செய்வதிலேயே தேவர்களைப் போல விளங்குகின்றனர். வேறு எதிலும் அவ்வாறு விளங்குவதில்லை. ஸிஸரோ குறிப்புகள் பகுப்பு நன்நெறிகள்
நன்றி மறத்தல் என்பது ஒருவர் செய்த உதவியை மறந்து அவருக்கு நன்றியில்லாம் இருத்தலாகும். நன்றி மறத்தலை விலங்குகள் மனிதனுக்கு விட்டுவிடுகின்றன. கோல்டன் மனிதனிடமுள்ள பொய், செருக்கு, பிதற்றல், குடிவெறி மற்றும் எந்தத் தீமையைக்காட்டிலும். நன்றி மறத்தலை நான் மிகவும் வெறுக்கிறேன். அத்தீமைகள் நம் உதிரத்தைப் பாழாக்குகின்றன. ஷேக்ஸ்பியர் நன்றியற்ற குழந்தையைப் பெற்றிருத்தல் நாகத்தின் பல்லைவிட எவ்வளவு கூர்மையானது. ஷேக்ஸ்பியர் நன்றி கெட்ட மனிதனைவிட ஒரு நன்றியுள்ள நாய் மேலானது. ஸாஅதி நன்றியின்மை வீரத்திற்குவிடமாகும். ஸர். பி. ஸிட்னி குறிப்புகள் பகுப்பு தீயொழுக்கங்கள்
நாகரிக நடை குறித்த மேற்கோள்கள் ஒழுக்கத்திற்கும். காலத்திற்கேற்ற நடைக்கும் மிக நெருங்கிய சம்பந்தம் உண்டு. நமது கற்பனையில்தான் நாம் அவற்றைப் பிரித்து எண்ணுகிறோம். ஸிஸரோ ஒருவன் எங்கு தங்கியிருக்கிறானோ அந்த இடத்திலுள்ள நாகரிக நடையை மேற்கொள்ள வேண்டும் என்பது விதிகளுக்கெல்லாம் மேலான விதி, சட்டங்களுக்கெல்லாம் மேலான பொதுச் சட்டம். மாண்டேயின் நாகரிக நடை என்பது வெளித் தோற்றங்களுக்கு உரிய கலை. அது ஒருவருக்குக் காலத்திற்கேற்ற தோற்றத்தைப்பற்றி ஆசை உண்டாக்கும். சேபின் ஒவ்வொரு தலைமுறையும் பழைய நாகரிக முறைகளை ஏளனம் செய்து சிரிக்கின்றது. ஆனால், புதிய முறைகளையே கண்டிப்பாகப் பின்பற்றுகின்றது. தோரே நாகரிகக் கோலம் ஒரு கொடுங்கோலனைப் போன்றது. அதன் பிடியிலிருந்து நம்மை எதுவும் விடுவிப்பது இல்லை. பாஸ்கல் தனித் தன்மையை விட்டுவிடுங்கள். பழைய முறைகளைப் பிடித்துக்கொண்டிருப்பதைவிட புதிய முறையில் அதிகக் கர்வம் தோன்றாமலும் இருக்கலாம். அவை மூடர்கள் கண்டு பிடித்தவைகளாகவும் இருக்கலாம். அறிஞர்கள் அவைகளை மறுப்பதற்குப் பதிலாகப் பின்பற்றவும் செய்யலாம். ஜோபெர்ட் புதுமைத் தோற்றம் உள்ளது ஒவ்வொன்றுமே தீயது என்றோ பழையது ஒவ்வொன்றும் நல்லது என்றோ கருதுவது முற்றிலும் தவறாகும். மோமெரீ நாகரிகத் தோற்றம் எப்பொழுதும் புதுமையாகவே இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அது தெவிட்டிப் போய்விடும். லோவெல் நவநாகரிகத்தில் மிகவும் முன்னதாகச் சேரவும் வேண்டாம் அதிக நாள்வரை பின்தங்கி இருக்கவும் வேண்டாம். எந்தக் காலத்திலும் அமிதமான இரண்டு எல்லைகளின் பக்கம் நிற்க வேண்டாம். லவேட்டர் குறிப்புகள் பகுப்பு சமூகவியல்
அரங்கு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில், நேரடியாக பார்வையாளர்கள் காணும் வகையில் மேடையில் கலைஞர்கள், பொதுவாக நடிகர்களால் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் இடம்மாகும். மேற்கோள்கள் நாடகங்கள் ஒழுக்கத்தைப் போதிக்கின்றன என்றும். நாடக அரங்கு வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி என்றும் கூறப்பட்ட போதிலும், இந்தக் கூற்றுகளுக்கு உண்மையிலும் அனுபவத்திலும் ஆதாரம் இல்லை. ஸர் ஜான் ஹாகின்ஸ் நாடகத்தில் ஒவ்வொருவரும் எவ்வளவு நேர்மையாகவும் தாராளமாகவும் நடந்துகொள்கின்றனர் என்பது ஆச்சரியமாயிருக்கிறது. நியாயமான கட்டத்தில் நாம் அனைவரும் ஏகோபித்துக் கைகளைத் தட்டுகிறோம். தீயதை அனைவரும் கண்டிக்கிறோம். இவற்றில் நமக்கு மன உணர்ச்சியைத் தவிர வேறு எதுவும் செலவில்லை. ஹாஸ்லிட் நாடக அரங்கில் வாழ்க்கையின் இன்ப ஒளியும், துக்கமும் காணப்பெறும் பொழுது என்னுள் ஆழ்ந்த தீவிரமான சிந்தனைகள் நிறைந்துவிடுகின்றன. ஹென்றி சைல்ஸ் இயற்கை, பரம்பொருளின் செயல்களை நடித்துக் காட்டும். கலை கண்யமான உள்ளங்களுக்கு மட்டுமே ஒப்படைக்கப்பெற்றிருக்க வேண்டும் என்பது விரும்பத்தக்கது. கதே குறிப்புகள் பகுப்பு கலை
நாட்டுப்பற்று என்பது தாயகத்துடனான அன்பு, பக்தி மற்றும் ஒன்றிணைக்கும் உணர்வும், அதே உணர்வைக் கொண்டுள்ள பிற குடிமக்களுடனான கூட்டணியாகும். நாட்டுப்பற்றைவிட அதிக நெருககமான அன்பு வேறில்லை. பிளேட்டோ ஆண்டவருக்குரிய என் கடமைக்கு அடுத்தபடி என் தாயகத்திற்குரிய அன்பும், மரியாதையும் முதன்மையானவை. டி.தௌ குறிப்புகள் பகுப்பு அரசியல் கருத்தியல்கள்
நாட்டுப்புறம் என்பது மிகக் குறைந்த குடியடர்த்தி கொண்ட, நகரப் பகுதிகளிலிருந்து வேறுபட்ட தன்மைகளைக் கொண்ட பகுதிகளைக் குறிக்கும். நாட்டுப்புறத்து வீடுகளும். தோட்டங்களும் துரவுகளும் கழனிகளும், ஓடைகளும், காவுகளும் கிராமப்புறத்து விளையாட்டுகளும், எல்லாம் ஒழுக்கம் நிறைந்தவை. நகரங்களிலோ, பல்கலைக் கழகங்களிலோ அந்தப் பண்பைக் காண்பதரிது. ஏ. பி. ஆல்காட் நாட்டுப்புறத்தில் வசிக்கும் மனிதர்கள், ஒழுக்கத்தைக் கற்பதுடன் சுதந்தர ஆசையையும் பெறுகின்றனர். மினாண்டர் நாட்டுப்புற வாழ்க்கை உடலுக்கு ஆரோக்கியமாயிருப்பதுடன் உள்ளத்திற்கும் உரமளிப்பதாகும். ரூஃபினி கடவுள். நாட்டுப்புறத்தை உண்டாக்கினார் மனிதன், நகரத்தை உண்டாக்கினான். கௌப்பர் குறிப்புகள் பகுப்பு கருப்பொருட்கள்
நாணயம் என்பது ஒருவரின் நேர்மையான செயல்களாகும். இதுகுறித்த மேற்கோள்கள் நாணயம் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி, அதில் மூச்சுக் காற்றுப் பட்டு, அது அழுக்கடைந்தால் துடைத்துவிடலாம். ஆனால், அது உடைந்துபோனால், அதைப் பழுது பார்க்க முடியாது. .வால்டர் ஸ்காட் ஒரு மனிதனின் நாணயத்தைப் பாதிக்கக்கூடிய மிகச்சிறிய விஷயங்களிலேகூடக் கவனமாயிருக்க வேண்டும். அதிகாலை ஐந்து மணிக்கும் இரவு ஒன்பது மணிக்கும் உன் சம்மட்டியின் ஓசையை உனக்குக் கடன் கொடுத்தவன் கேட்டால், அவன் உன் கடனை மேலும் ஆறு மாதத்திற்குக் கேளாமலிருப்பான். நீ வேலை செய்துகொண்டிருக்க வேண்டிய நேரத்தில், அவன் உன்னை மேடைப் பந்தாட்டத்திலே கண்டாலும், மதுக்கடையிலே உன் குரலைக் கேட்டாலும், மறு நாளே அவன் தன் கடனைக் கேட்டு ஆளனுப்புவான். ஃபிராங்க்லின் கடன் வாங்கியவர்களைவிடக் கடன் கொடுத்தவர்களுக்கு ஞாபகம் அதிகம். ஃபிராங்க்லின் குறிப்புகள் பகுப்பு நல்லொழுக்கங்கள்
நிகழ்காலம் என்பது கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான தற்காலத்தைக் குறிப்பதாகும். இதுகுறித்த மேற்கோள்கள். இன்றே கடைசி நாள் என்ற எண்ணத்துடன் வாழ்வாயாக பிஷப் ஒவ்வொரு நாளும் உன் குறிக்கோளை நிறைவேற்றி வரவும். ஒவ்வொரு மாலையும் ஓரளவு வேலை முடிந்திருப்பதை காண்பாய். கதே கடமையும் இந்த நாளுமே நம்முடையவை பயன்களும் எதிர்காலமும் கடவுளைச் சேர்ந்தவை. ஹொரேஸ் கிரீலே நிகழ்காலத்தில் என் கடமைகளைச் செய்து வந்தால், எதிர் காலத்தைக் கடவுள் கவனித்துக்கொள்வார். குறிப்புகள் பகுப்பு காலம்
நிதானம் குறித்த மேற்கோள்கள் நீண்ட நாள் வாழ்வதற்கு நிதானமாக வாழ்தல் அவசியம் ஸிஸரோ செங்குத்தான பாறைகளில் ஏறுவதற்கு முதலில் மெதுவாக ஏற வேண்டியிருக்கும். ஷேக்ஸ்பியர் குறிப்புகள் பகுப்பு கருப்பொருட்கள் பகுப்பு நல்லொழுக்கங்கள்
நிறைவுடைமை என்பது குறித்த மேற்கோள்கள். நிறைவுடைமை படிப்படியாக நீண்ட காலத்தில் அமைவது. வால்டேர் நிறைவு அசாதாரணமான விஷயங்களைச் செய்வதில் இல்லை, சாதாரண விஷயங்களை, அசாதாரண முறையில், நன்றாகச் செயவதில் இருக்கின்றது. எதையும் அலட்சியம் செய்ய வேண்டாம் இறைவனுக்காக எந்தச் சிறு செயலையும் செய்து முடிக்கலாம். ஏ. ஆர்னால்ட் ஒவ்வொரு விஷயத்தையும் நிறைவுடையதாகச் செய்ய முயற்சி செய்யவும், பெரும்பாலான விஷயங்களில் நிறைவடைவது கஷ்டமே ஆயினும் அதைக் குறிப்பாக வைத்துக்கொண்டு முயற்சி செய்பவர்கள் ஏறத்தாழ அதை எட்டிவிடுவார்கள் மற்றவர்கள் சோம்பலினாலும், அயர்வினாலும். எடுத்துக் கொண்ட விஷயங்களை நிறைவேற்றுவது கஷ்டமென்று இடையில் கைவிட்டுவிடுவார்கள். செஸ்டர்ஃபீல்டு குறிப்புகள் பகுப்பு கருப்பொருட்கள்
நினைவு என்பது கடந்த கால நிகழ்வுகள், தகவல்கள் பொன்ற்றறை நினைவில் வைத்திருக்கும் மனித அறிவாறலாகும். குறித்த மேற்கோள்கள் எல்லா அறிவும் சேர்ந்து தங்கியிருப்பதே நினைவு. ஸிஸரோ நினைவுதான் நிதிகளின் காப்பாளன். அவனிடமிருந்து பணங்கள் பெறுவதற்கு முதலில் நாம் செல்வங்களைச் சேர்த்து வைக்க வேண்டும். ரோ நினைவு கவனத்தின் மகள், அறிவின் தாய். டப்பெர் மகிழ்ச்சியோடு நாம் கற்பது ஒரு போதும் மறக்கப்படுவதில்லை. ஏ. மெர்ஸியர் கவனந்தான் உண்மையான நினைவுக்குரிய பாதை. ஜான்ஸன் ஒருவருக்கு முற்றும் பற்றில்லாத விஷயங்கள் நினைவில் இருப்பதில்லை. ஜி. மாக்டொனால்டு குறிப்புகள் பகுப்பு மனம்
நினைவுச் சின்னம் என்பது, குறிப்பிடத்தக்க மனிதர்கள், நிகழ்வுகளை நேரடியாக நினைவு கூர்வதற்கான அமைப்புகளாகும். இது, ஒரு சமூகத்தினருடைய கடந்தகால நிகழ்வுகளின் நினைவுகளைக் குறிக்கும் அமைப்பாகவும் இருக்கலாம். மேற்கோள்கள் ஒரு தலைமுறைக்கும் பின் தலைமுறைக்கும் தொடர்பு ஏற்படுத்தும் சங்கிலிகள் நினைவுச் சின்னங்கள். ஜோபெர்ட் நினைவுச் சின்னம் அவசியமாயுள்ள ஒருவருக்கு அதை வைக்க வேண்டியதில்லை. ஹாதார்ன் எவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் தேவையில்லையோ அவர்களே அவைகளுக்கு உரியவர்கள். அவர்கள் மக்களின் உள்ளங்களிலும் நினைவுகளிலும் ஏற்கனவே நினைவுச் சின்னங்களை எழுப்பியுள்ளார்கள். ஹாஸ்லிட் தலைசிறந்த மனிதனுக்கு மார்பளவுச் சிலை ஒன்றும், அவர் பெயருமே சின்னமாயிருக்கப் போதுமானவை. சிலையை விவரம் காட்டப் பெயர் மட்டும் போதாதென்றால், இரண்டுமே தொலையட்டும். லாண்டர் குறிப்புகள் பகுப்பு கட்டிடங்கள்
நீதிக் கதைகள் என்பவை குழந்தைகளுக்கு நீதிகளை போதிக்கும் ஈசாப் நீதிக்கதைகள், பஞ்சதந்திரக் கதைகள் போன்ற கதைகளாகும். மேற்கோள்கள் நீதிக் கதைகள், போதனை செய்தவன் கடுமையைக் குறைத்து விடுகின்றன. ஆனால், அதை மறைத்து விருப்பமான வருவத்தில் போதித்துவிடுகின்றன. அடிஸன் குறிப்புகள் பகுப்பு இலக்கியங்கள் பகுப்பு நீதி
நீதிமொழிகள் என்பது பிரபலமாக அறியப்பட்ட மற்றும் மீண்டும் மீண்டும் கூறப்படும் எளியதும், உறுதியானதுமான சொற்கள், இவை பொது அறிவு அல்லது மனிதகுலத்தின் நடைமுறை அனுபவத்தின் அடிப்படையில் உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. மேற்கோள்கள் நமது வாழ்க்கையை முறைப்படுத்திக்கொள்ளவும், உணர்ச்சிகளை நிதானப்படுத்திக்கொள்ளவும் நீதி வாக்கியங்களை விதித்து அருளியவன். இப்பொழுது மட்டுமன்றி, பின்வரும் தலைமுறைகளிலும் மனித இயற்கைக்குப் பெரிய நன்மையைச் செய்தவனாவான். ஸெனீகா செய்வதற்கு எது நல்லது என்று தெரிந்துகொள்வதைப் போலச் செய்வதும் அவ்வளவு எளிதாக இருந்தால், வீட்டுக் கோயில்களெல்லாம் பெரிய மாதாகோயில்களாகிவிடும். ஏழை மனிதர்களின் குடிசைகளெல்லாம் அரசர்களின் அரண்மனைகளாகிவிடும். ஒரு சமய குரு தாமே தம் உபதேசங்களின்படி நடந்தால் நல்லதுதான். செய்வதற்கு எது நல்லது என்பதை நான் இருபது பேர்களுக்கு எளிதாகக் கற்றுக்கொடுக்க முடியும். ஆனால், அந்த இருபது பேர்களுள் ஒருவனாக இருந்து என் உபதேசங்களின்படி நடப்பதுதான் அகைவிடக் கடினம் ஷேக்ஸ்பியர் நல்ல உபதேசங்களைச் செய்பவர் அவைகளின்படி நடக்காவிட்டால், அவர் வெளி வேடக்கார்ரென்று பொதுவாகக் கூறுவது வழக்கம். இது அநீதியாகக் குற்றம் சாட்டுவதாகும். அவர் தம் உணர்ச்சிகளை அடக்கிக்கொள்வதன் நன்மைகளை உண்மையிலேயே நம்பியிருப்பர். ஆனால், அதில் அந்தச் சமயம் அவர் வெற்றி பெறாமலிருக்கலாம் ஒரு கடல்யாத்திரை அல்லது பிரயாணம்பற்றி ஒரு மனிதன் நம்பி, தான் போவதற்குத் தைரியமோ ஊக்கமோ இல்லாமல், மற்றவர்கள் போகும்படி உற்சாகப்படுத்தக்கூடும். ஜான்ஸன் நீதி மொழிகளைக்காட்டிலும் பிறர் காட்டும் மாதிரியையே பலர் பின்பற்றுகின்றனர். ஆனால், மாதிரியைக்காட்டிலும், நேரடியாக நீதிமொழிகளிடமிருந்தே கற்றுக்கொள்வதுதான் மேலானது. வார்விக் குறிப்புகள் பகுப்பு உரையாடல்
நெருக்கமான பழக்கம் என்பது குறித்த மேற்கோள்கள் நெருக்கமான பழக்கம் முதலில் அன்பை உண்டாக்கும் முடிவில் வெறுப்பை உண்டாக்கும். ஃபுல்லர் வேலைக்காரர்களுடன் அதிகமாகப் பழக வேண்டாம் அடிக்கடி பார்வையிலுள்ள பொருள்கள் எல்லாம் மதிப்பில் குறையும். டிரைடன் நெருக்கமான பழக்கம் வெறுப்பை உண்டாக்காவிட்டாலும், இருக்கிற மதிப்பின் கூர்மையை மழுக்கிவிடும். ஹாஸ்லிட் குறிப்புகள் பகுப்பு சமூகம் பகுப்பு கருப்பொருட்கள்
நேரம் அல்லது காலம் குறித்த மேற்கோள்கள் நேரந்தான் நமக்கு மிக அவசியமான தேவை. ஆனால், அந்தோ அதைத்தான் நாம் மிகவும் அதிகமாக வீணாக்குகிறோம். பென் நேரத்தை முறையாக வகுத்துக்கொள்வது மனத்தில் சிந்தனைகள் முறையாக அமைந்திருப்பதைக் காட்டும். பிட்மன் ஒவ்வொரு தங்கச் சரிகையின் இழையில் எவ்வளவு மதிப்பு உள்ளதோ, அவ்வளவு மதிப்புள்ளது ஒவ்வொரு நிமிட நேரமும் ஜே. மேஸன் தக்க சமயத்தைத் தேடிக்கொள்வது நேரத்தைக் காத்துக் கொள்வதாகும். பேக்கன் கடவுளுக்கு அடுத்தபடியாக நேரத்தை மதித்தல் ஒழுக்க முறையில் உயர்ந்த விதியாகும். லவேட்டர் மணிகளுக்குச் சிறகுகள் உண்டு. அவை காலத்தை ஏற்படுத்ரியவரிடம் சென்று. நாம் அவைகளை எப்படி உபயோகித்தோம் என்பதைதைத் தெரிவிக்கும். மில்டன் நாம் நேரத்தைச் சரியாகப் பயன்படுத்தினால், நமக்குப் போதிய நேரம் இருக்கத்தான் செய்யும். கதே குறிப்புகள் பகுப்பு காலம் பகுப்பு மெய்யியல் பகுப்பு நம்பிக்கைகள்
நேரம் தவறாமை அல்லது காலம் தவறாமை என்பது ஒரு பணியை முடிக்க நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னர் அல்லது சரியான நேரத்துக்குச் சென்று கடமையை நிறைவேற்றும் ஒரு பண்பு ஆகும். மேற்கோள்கள் நேரம் தவறுதல் பண்பில் குறைந்ததாகும். மேஸன் தொழிலில் முக்கியமானது நேரம் தவறாமை. அது இல்லாமல் எந்த முறையும் பயனற்றது. ஸெலில் நான் எனக்குக் குறித்த நேரத்திற்குக் கால் மணி நேரம் முந்தியே சென்றுவிடுவது வழக்கம், அதுதான் என்னை மனிதனாக்கியுல்லது. நெல்ஸன் பிரபு மூன்று மணி நேரம் முன்கூட்டிச் சென்றாலும் செல்லலாம். ஒரு நிமிடம் பின்தங்கிவிடக்கூடாது. ஷேக்ஸ்பியர் ஓடிச் செல்வதால் பயனில்லை. முன் கூட்டியே புறப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். ஃபாண்டெயின் வாஷிங்டனுடைய காரியதரிசி ஒருவர் காலதாமதமாக வந்ததற்கு அவரிடம் காரணம் கூறுகையில், தமது கைக்கடிகாரம் மிகவும் மெதுவாகப் போவதாகத் தெரிவித்தார். அதற்கு வாஷிங்டன், நீர் துக்கடிகாரம் வாங்க வேண்டும் அல்லது நான் புதுக் காரியதரிசியை நியமிக்க வேண்டும். என்று கூறினார். குறிப்புகள் பகுப்பு காலம் பகுப்பு நல்லொழுக்கங்கள்
நோக்கம் என்பது இலக்குகள், குறிக்கோள்கள் மற்றும் விரும்பிய முடிவுகளை உள்ளடக்கிய பல்வேறு அர்த்தங்களைக் கொண்ட ஒரு சொல். மேற்கோள்கள் உடலுக்கு ஆன்மா எப்படியோ, மரத்திற்கு வேர் எப்படியோ, அப்படிச் செயல்களுக்குச் சரியான நோக்கங்கள் இன்றியமையாதவை. ஸிம்மன்ஸ் மனிதனுடைய செயல்களிலும், இயற்கையின் வேலைகளிலும், நோக்கமே முக்கியமாக ஆராயத்தக்கது. கதே நோக்கங்கள் செயல்களைவிட மேலானவை. மனிதர்கள் குற்றத்தினுள் தாமாகச் சிக்கிவிடுகிறார்கள். தீமைகளை, அவர்கள் முன்னால் சிந்திப்பதைக்காட்டிலும், அதிகமாய்ச் செய்து விடுகிறார்கள். நன்மையில், அவர்கள் செய்வதைவிட, அதிகமாய்ச் சிந்திக்கிறார்கள். போவீ மனிதனுடைய மனத்தை இயக்கிவைப்பவை நன்மையில் ஆசையும் தீயதில் அச்சமும், ஜான்ஸன் கடவுள் தூபத்தையும் காணிக்கையையும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், வணங்குபவனின் அந்தரங்க சுத்தியையும் பக்தியையுமே ஏற்றுக்கொள்கிறார். ஸெனீகா குறிப்புகள் பகுப்பு கருப்பொருட்கள்
நோய் வியாதி, பிணி என்பது உயிரினங்களின் உடலிலோ, மனதிலோ ஏற்படும் அசாதாரண நிலைகளைக் குறிக்கும். இதனை நலமற்ற நிலை, சீரழிந்த நிலை எனலாம். நோய் மனித வாழ்வின் நிலையான துன்பங்களில் ஒன்று. மேற்கோள்கள் நோய், இளமையில் தோன்றும் ஒரு வகை முதுமை உலக வாழ்க்கையில் நமது நம்பிக்கை குறைவதற்கு அது கற்பிக்கின்றது. போப் இயற்கையின் விதிகளை மீறுவதற்கு. அது அளிக்கும் தண்டனையே நோய் ஸிம்மன்ஸ் பிணியிருக்கும் பொழுதுதான் நாம் அனுதாபத்தை அதிகமாக வேண்டுகிறோம். நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு சார்ந்திருக்கிறோம் என்பதையும். அத்தியாவசியமான தேவைகளுக்குக்கூட நாம் பிறரை எதிர்பார்க்கிறோம் என்பதையும் உணர்கிறோம். இவ்வாறு பிணி, வாழ்க்கையின் பிரத்தியட்ச உண்மைகளைக் காணும்படி நம் கண்களைத் திறந்து வைக்கின்றது. அது மறைமுகமான ஒரு நன்மையாகும். எச் பல்லோ குறிப்புகள் பகுப்பு நோய்கள்
பகுத்தறிவு எனப்படுவது பொருட்களின் நிகழ்வுகளின் கருத்துக்களின் கூறுகளை அவதானித்து, ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து ஆதாரபூர்வமாக புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறையையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது. பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையக் கண்டறிவதே. மேற்கோள்கள் மனிதன் பகுத்தறிவைக்காட்டிலும், துடிப்பு, உணர்ச்சி. வேகம், செயல் ஆகியவற்றால் அதிகமாக உந்தப்பெறுகிறான். உயிருள்ள இனங்களில் உலகத்தில் பகுத்தறிவு மிகவும் கடைசியாகத்தான் வேலை செய்யத் தொடங்கியிருக்கிறது. அவைகளுள் பெரும்பாலானவை அதன் உதவியில்லாமலே தினசரி வாழ்க்கையில் நன்றாகவே இருக்கின்றன. ஜேம்ஸ் டி ஆடம்ஸ் ஆராயாமல் ஒரு மனிதன் பற்றிக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை அவனை விட்டுவிடும்படி செய்ய முயலுதல் பயனற்ற வேலையாகும். ஸ்விங்ஃப்ட் ஆராய்ச்சி செய்ய மறுப்பவன், வெறியன் ஆராய்ச்சி செய்ய முடியாதவன். மூடன் ஆராய்ச்சி செய்ய அஞ்சுபவன் அடிமை. ஸர் டபுள்யு. டிரம்பண்ட் தெளிவான, போதுமான ஆராய்ச்சியறிவு சிலருக்குத்தான் இருக்கிறது. இந்தச் சிலர் அமைதியாய் இருந்துகொண்டு தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி வருகிறார்கள். கதே அதிக வறுமையும், அதிகச் செல்வமும் ஆராய்ச்சி அறிவுக்குச் செவி கொடுக்கமாட்டா. பீல்டிங் அறிவாளர்களுக்குப் பகுத்தறிவு கற்பிக்கின்றது. குறைந்த அறிவுள்ளவர்களுக்கு அனுபவம் கற்பிக்கின்றது. மிருகங்களுக்கு இயற்கை கற்பிக்கின்றது. ஸிஸரோ உணர்ச்சிகளாலன்றிப் பகுத்தறிவால் உந்தப்பெறுபவன் தேவர்களுக்கு அடுத்தபடியாயுள்ளவன். எல்லைக்குட்பட்டது. எல்லையேயில்லாததை எப்படிக் கண்டு பிடித்துக்கொள்ள முடியும்? டிரைடன் நாம் இருக்கிறதைக் கொண்டுதான் ஆராய முடியும் பிரத்தியட்ச உண்மைகளையே நாம் ஆராய முடியும், நடக்கக் கூடியவைகளைக் கொண்டு ஆராய முடியாது. போலிங்புரோக் குறிப்புகள் பகுப்பு மனம் பகுப்பு நம்பிக்கைகள்
பகைவர் அல்லது எதிரி என்பது தங்களுக்கு எதிராக அல்லது அச்சுறுத்தலாகக் கருதப்படுபவர்களை குறிப்பிடும் சொல்லாகும், இந்தச் சொல் பொதுவாக போர்ச் சூழலில் மிகுதியாக பயன்படுத்தப்படுகிறது. மேற்கோள்கள் பகைவருள் சிறு பகைவன் என்பது கிடையாது. ஃபிராங்க்லின் ஒரு பகைவனை வெல்வதைக்காட்டிலும் அவனைத் திருப்புவது மேல். வெற்றி அவனுடைய விடத்தைப் போக்கலாம். ஆனால் அவனைத் திருத்தி வசப்படுத்திக்கொள்வதில், அவனுடைய உள்ள உறுதியே போய்விடும். ஃபெல்ட்ஹாம் உன் எதிரிகளைக் கவனி. அவர்களே உன் குறைகளை முதலில் கண்டிப்பவர்கள். ஆன்டிஸ்கினிஸ் நாம் சந்தேகிக்காத எதிரியே மிகவும் அபாயகரமானவன். ரோஜாஸ் நம்மைவிட நம் எதிரிகள் பெற்றுள்ள அதிக நல்ல குணங்களை நாம் கவனித்து வரவேண்டும். குறைகளை நீக்கிக்கொண்டு. அவர்களுடைய நல்ல குணங்களை நாம் அவர்களிலும் அதிகமாகப் பெறவேண்டும். புளுடார்க் அறிஞரே! உமது பகைவர்களுடன் உறவாடிக்கொண்டிருக்கும் அந்த நண்பரைக் கை கழுவிவிடும். ஸாஅதி பழமொழிகள் உனக்கு ஐம்பது நண்பர்கள் இருக்கிறார்களா? அவர்கள் போதமாட்டார்கள் உனக்கு ஒரு பகைவன் இருக்கிறானா? அவனே அதிகம்! இத்தாலியப் பழமொழி குறிப்புகள் பகுப்பு கருப்பொருட்கள்
பகை என்பது நடைமுறையில் கோபம் ஆத்திரத்தை ஒத்ததாக கருதப்படுகிறது. மேற்கோள்கள் பகை வன்மம் தான் தயாரிக்கும் விடத்தில் பாதியைத் தானே குடித்துவிடும். ஸெனீகா வன்மமுள்ள இடத்தில் எந்தப் பெரிய நன்மையும் சிறிதாகிவிடும். ஸெனீகா குறிப்புகள் பகுப்பு உணர்வுகள் பகுப்பு உளவியல்
பக்தி என்பது குறித்த தேற்கோள்கள் பக்தியுடன் முழங்கால் பணிந்தால், எல்லாம் புனிதமாகிவிடும். ஹோம்ஸ் ஒன்றுமே படித்தறியாதவன் பக்தி கொண்டிருந்தால், அடிக்கடி அதை உபயோகித்து வந்தால், உள்ளத்திலே ஒரு வகை மேன்மையை அடைவான். பெருமையுள்ள ஓர் எளிமை அவனிடம் ஏற்படும், அது அவனை மேலே உயர்த்துகின்றது. பக்தியால், தாழ்ந்த நிலையிலுள்ளவன் அற்பப்புத்தியுள்ளவனாக இருக்கமாட்டான். உயர்ந்த நிலையிலுள்ளவன் செருக்கடையவும் மாட்டான். ஜான்ஸன் நாம் பக்தி சம்பந்தமான காரியங்களின் நடுவில் உறங்கிவிட்டால், சயித்தான் நம்மைத் தாலாட்டுவான். பிஷப் ஹால் குறிப்புகள் பகுப்பு சமயம்
பணியாளர் என்பவர் ஒரு தனி நபரிடமோ, நிறுவனத்திலோ, அரசிலோ ஊதியத்துக்காக வேலை செய்பவராவார். நல்ல பணியாளனுக்குச் சன்மானம் கொடுத்து ஆதரித்து வரவும். கெட்டவனை வைத்துக்கொண்டு அவனிடம் உரக்கக் கத்திக் கொண்டிருப்பதைவிட அவனை வெளியேற்றிவிடுவது மேல் சேம்பர்ஸ் முன்னால் நான் என்னிடமிருந்த வேலையாள்களில் ஒவ்வொருவனையும் நண்பனாகக் கொள்ளலாம் என்று தவறாக எண்ணிக்கொண்டிருந்தேன் ஆனால், இப்பொழுது அடிமை வேலை செய்வதன் இயற்கை நேர் மாறான குணத்தை உண்டாக்குகின்றது என்பதைக் கண்டுகொண்டுவிட்டேன். ஜனங்களுடைய குணம் அவர்களுடைய கல்வியிலிருந்தும், வாழ்க்கையில் அவர்களுடைய நிலையிலிருந்தும் அமைகின்றது. பிறப்பு மட்டும் அதிகமாய்ப் பாதிப்பதில்லை. ஷென்ஸ்டன் குறிப்புகள் பகுப்பு தொழில்கள்
ஜான் டி. ராக்பெல்லர் . , ஜூலை 8, 1839 மே 23, 1937, . இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெட்ரோலிய பொருள் சந்தையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய அமெரிக்கப் பணக்காரர் மற்றும் தொழிலதிபர் ஆவார். மேற்கோள்கள் வெற்றிப்பாதையை நோக்கிச் செல்லுங்கள். உண்மையாகவும், நம்பிக்கையுடனும் இருங்கள். மனதை தளரவிடாதீர்கள் உண்மையைக் கடைபிடியுங்கள். நீங்கள் இல்லாவிட்டால் முதலாளிக்கு பெருத்த நஷ்டம் என்று அவர் எண்ணும்படியாகச் சாமார்த்தியமாக வேலை செய்யுங்கள். சிறு உத்தியோகத்தில் சேர்ந்து பெரிய பதவிக்கு வர வேண்டும். பிறர் உங்களிடம் எதிர்பார்ப்பதை விட அதிகமாகச் செய்யுங்கள். செய்யும் தொழிலைப்பற்றி நன்றாக அறிந்துக்கொள்ள வேண்டும். கஷ்டப்பட்டு வேலை செய்யாவிட்டால் வாழ்க்கையில் சந்தோஷத்தையே காண முடியாது. விளையாட்டுகளில் மனதை ஓடவிடக்கூடாது. முதலாளிகளால் தொழிலாளி நசுக்கப்படாமலிருக்கவும் தொழிலாளரால் மூலதனம் போட்டவர்களுக்கு இடையூறில்லாமலிருக்கவும். தொழிலாளரே தொழிலாளரை அடக்காமலும். முதலாளிகளே முதலாளிகளை நசுக்காமலும் இருக்கும் நிலையை உண்டாக்க வேண்டுமென்ற முறையில், நாம் வேலை செய்து கொண்டிருக்கிறோம். குறிப்புகள் பகுப்பு 1839 பிறப்புக்கள் பகுப்பு 1937 இறப்புக்கள் பகுப்பு அமெரிக்கர்கள்
பத்திரிக்கையாளர் என்பவர் பொதுவாக பத்திரிக்கையில் பணிபுரிபவர்களைக் குறிக்கும். தற்போது பத்திரிக்கை மட்டுமல்லாது, தொலைக்காட்சி, பண்பலை மற்றும் அனைத்து மக்கள் ஊடகங்களில் பணிபுரிபவர்களும், பத்திரிக்கையாளர் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். பத்திரிகையாளர். சமூகத்தின்மீது விழும் ஆலங்கட்டிகளிலிருந்து தமது குடையால் பாதுகாத்து வருகின்றனர். ஜி. டபுள்யு. ரஸ்ஸல் நம்முடைய ஜனநாயகத்தைப் போன்ற ஆட்சியுள்ள பெரிய நாடுகளில் அதிகச் செய்திகளைப் பரப்புவதும், அதிகச் சகிப்புத் தன்மையும் அவசியம், ஜனங்களின் அறிவைப் பெருக்குவதும், கல்வியைப் பரப்புவதும் பத்திரிகைகளின் உண்மையான முயற்சிகளாயிருக்கவேண்டும். தாமே தலைமை வகித்து மக்களுக்கு முன்னால் நிற்பதைவிட, இவை முக்கியமானவை. டபுள்யு ஹோவர்ட் முதலில் உங்கள் செய்திகளைச் சேகரியுங்கள். பிறகு அவைகளை உங்கள் யுக்தம் போலத் திரிக்கலாம். மார்க் டுவெயின் நூலாசிரியன் என்பதைவிட நான் என்னைப் பத்திரிகையாளன் என்றே சொல்லிக்கொள்ள விரும்புவேன். ஏனெனில், பத்திரிகையாளன் தொழிலைக் கற்றுக்கொண்டே பிழைப்பையும் நடத்துபவன். ஜி. கே. செஸ்டர்டன் பத்திரிகையை அப்புறப்படுத்திவிட்டால், நமது நாடு குழப்பமாகிவிடும். ஹாரிசாண்ட்லர் வாரந்தோறும் எழுதுதல், தினந்தோறும் எழுதுதல், சுருக்கமாக எழுதுதல், ரயில்களைப் பிடிப்பதற்கு அவசரமாக ஓடுபவர்களுக்காகச் சுருக்கமாக எழுதுதல் அல்லது மாலை நேரங்களில் களைத்து வீடு திரும்புகிறவர்களுக்காக எழுதுதல் ஆகியவை எழுத்தின் தராதரம் தெரிந்தவர்களுக்கு மிகவும் கஷ்டமான வேலையாகும். விர்ஜீனியா உல்ஃப் ஆயிரம் துப்பாக்கிச் சனியன்களைக்காட்டிலும், மூன்று பத்திரிகைகளைக் கண்டு நான் அஞ்சுகிறேன். நெப்போலியன் நாம் மனிதர்களும் பத்திரிகைகளும் நடத்தும் ஆட்சியின்கீழ் வாழ்கிறோம். வெண்டல்ஃபிலிப்ஸ் குறிப்புகள் பகுப்பு தொழில்கள்
வெர்ஜீனியா வூல்ஃப் அல்லது வெர்ச்சீனியா வூல்ஃப் , ஜனவரி 25, 1882 மார்ச் 28, 1941 ஒரு ஆங்கிலப் பெண் எழுத்தாளர், கட்டுரையாளர், மற்றும் பதிப்பாளர். 20ம் நூற்றாண்டின் நவீனத்துவ எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவர்களாகக் கருதப்படுகிறார். தேற்கோள்கள் வாரந்தோறும் எழுதுதல், தினந்தோறும் எழுதுதல், சுருக்கமாக எழுதுதல், ரயில்களைப் பிடிப்பதற்கு அவசரமாக ஓடுபவர்களுக்காகச் சுருக்கமாக எழுதுதல் அல்லது மாலை நேரங்களில் களைத்து வீடு திரும்புகிறவர்களுக்காக எழுதுதல் ஆகியவை எழுத்தின் தராதரம் தெரிந்தவர்களுக்கு மிகவும் கஷ்டமான வேலையாகும். குறிப்புகள் பகுப்பு பிரித்தானியர்கள் பகுப்பு 1882 பிறப்புக்கள் பகுப்பு 1941 இறப்புக்கள்
பயிற்சி என்பது தொழில் சார்ந்த நுணுக்கங்களைக் கற்றுக்கொடுக்க ஏற்கனவே அத்தொழிலில் திறன் பெற்றவர்களால் வழங்கப்படும் தகவல் அல்லது திறன் பரிமாற்றம் ஆகும். பயிற்சி வழங்கப்படுவதற்கும் பயிற்சி பெறுவதற்கும் குறிப்பிட்ட நோக்கம் இருக்கும். மேற்கோள்கள் அறிவுப் பயிற்சியின் முதன்மையான நோக்கம் மனிதனுக்கு நிறைந்த அறிவையளிப்பதும், அவன் மனத்தைப் பூரணமாக அடக்கிக்கொள்ளும் ஆற்றலை வளர்ப்பதுமாகும். நோவாலிஸ் அரைகுறைப் பயிற்சி ஆடம்பரத்தை உண்டாக்கும் தீவிரப் பயிற்சி எளிய வாழ்வை உண்டாக்கும். போவீ சாதாரண அறிவுள்ள ஒரு மனிதன் பயிற்சியினாலும் கவனத்தினாலும் உழைப்பினாலும் தான் விரும்புவது போன்ற எந்த நிலையையும் அடைய முடியும். ஆனால், கவிஞனாவது மட்டும் வேறு கலையாகும். செஸ்டர்ஃபீல்டு குறிப்புகள் பகுப்பு கருப்பொருட்கள்
மரபு வழி என்பது மரபணுக்களின் வழித்தோன்றல்கள். அரச பரம்பரையைக் குறிக்க இச்சொல்லை வரலாற்று ஆசிரியர்கள் பயன்படுத்துகின்றனர். இதனைக் குடி எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆசிரியரின் வழிவந்த மாணாக்கர் பரம்பரையும் தமிழக வரலாற்றில் உண்டு. இது கருத்து மரபு. இதனைப் பரம்பரை என்றே வழங்குவர். மேற்கோள்கள் மேய்ச்சலைவிட இனம் அதிக வலிமையுள்ளது. ஜியார்ஜ் எலியர் ஐரோப்பாவின் அரச பரம்பரையைப் பார்த்தால், எல்லாம் ஆதியில் வெற்றிகரமான ஒரு போர் வீரனில் போய் முடியும் என்பதைத் தவிர வேறு என்ன பார்க்கிறோம்? வால்டர் ஸ்காட் மனித சமுதாயத்தின் ஆதித் தோற்றம் ஒரே மாதிரியானது நல்ல பரிசுத்தமான மனச்சாட்சியே மனிதனைப் பெருமையுடையவனாகச் செய்கின்றது. அந்தப் பெருமை வானிலிருந்து வருவது. ஸெனீகா நான் இறந்தவர்களிடமிருந்து பெருமையைக் கடனாகப் பெற மாட்டேன். எனக்கோ தகுதியில்லை. ரோ பரம்பரைப் பெருமையிருந்தால், நல்ல மனிதன் மேலும் புகழுடன் விளங்குகிறான்.ஆனால், இகழ்ச்சியிருந்தால், ஒருவன்,அதிகமாக வெறுக்கப்பெறுகிறான். அடிஸன் பரம்பரையைக் கவனித்தால், சில மனிதர் தம் முன்னோர்களின் நிழல்களாக விளங்குகின்றனர். லூகான் குறிப்புகள் பகுப்பு குடும்பம் பகுப்பு சமூகவியல்
பரிசுகள் என்பவை பதிலுக்கு ஏதாவது வரும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் எதையாவது அளிப்பது ஆகும். மேற்கோள்கள் நண்பர்கள் கேட்டால், நாளை என்பதில்லை. ஹெர்பெர்ட் பரிசுகள் அளிக்கும் பொழுது நீடித்து நிற்பவைகளாக அளிக்கவும், அவை நீண்ட காலத்திற்கு நமது நினைவை உண்டாக்கிக்கொண்டிருக்கும். ஃபுல்வர் உன் பகைவனுக்கு அளிக்கத் தகுந்த முதன்மையான பரிசு. மன்னிப்பு' உனக்குப் போட்டியாயுள்ளவனுக்கு, சகிப்புத் தன்மை நண்பனுக்கு. உன் இதயம் உன் குழந்தைக்கு நல்ல மாதிரியான நடத்தை தந்தைக்கு மரியாதை உனது தாய்க்கு. அவள் உன்னைப்பற்றிப் பெருமைப்படத்தக்க ஒழுக்கம் உனக்கு தன்மானப் பெருமை எல்லா மனிதர்களுக்கும். தாராள மனப்பான்மை. பால்ஃபோர் அன்போடு அளித்தால், சிறு பொருளாயிருந்தாலும் உண்மையில் பெரியதாகும். பிண்டார் அளிப்பவன் இதயமே பரிசின் பெருமையை அரியதாக்குவது. லூதர் குறிப்பபுகள் பகுப்பு கருப்பொருட்கள்
பரணி பாடுதல் அல்லது வீரத்தைப் பாடுதல் என்பது நாட்டு வீரனையும், அவன் வீரச் செயலையும் புகழ்ந்து பாடுவதாகும். மேற்கோள்கள் தேசிய உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுபவை வீரர்களைப் பற்றிய தேசியப் பாடல்கள். லாம்ப் ஒரு சமூகத்தின் வீரப் பரணிகளை நான் எழுதுவதானால், அதன் சட்டங்களை எவர்கள் இயற்றினாலும் எனக்குக் கவலையில்லை. ஃபினெச்சர் ஒரு பரணியோ. நன்கு அமைக்கப்பெற்ற பாடலோ உள்ளத்தில் பதிந்து, உணாச்சிகளை மென்மையாக்கி, ஒரு பெரிய ஒழுக்க நூலைவிட அதிகப் பயனை விளைவிக்கின்றது ஒழுக்க நூல் நமது அறிவைத் திருப்தி செய்யுமேயன்றி உணர்ச்சிகளை உண்டாக்காது. நம் பழக்கங்களைச் சிறிதும் மாற்றிவிடாது. நெப்போலியன் குறிப்புகள் பகுப்பு இலக்கியங்கள் பகுப்பு உரையாடல்
கையூட்டு,அல்லது பரிதானம், கைக்கூலி, இலஞ்சம் என்பது குறித்த மேற்கோள்கள் நீதிபதிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் முன்னால் பொன்னை விலையாகக் கொடுத்து வாங்கப்பெற்றுள்ளனர். போப் கண்ணியமான ஒரு மனிதனுடைய வாக்கை ஓட்டை விலைக்கு வாங்க இந்த உலகின் செல்வம் அனைத்தும் போதாது. கிரெகரி தங்கத்தின் இனிய வாடையில்லாத மனுக்கள் பெரும்பாலும் மறுக்கப்பெறுகின்றன. அவை பெற்றுக்கொள்ளப்பட்டாலும், படிக்கப்பெறாமல் மூலையில் போடப்பெறுகின்றன. மாஸிஞ்சர் குறிப்புகள் பகுப்பு சட்டமும் அரசாங்கமும் பகுப்பு தீயொழுக்கங்கள் பகுப்பு குற்றம்
பரோபகாரம் என்பது பர உபகாரம் என்ற சொற்களின் சேர்கையாகும். பிறருக்கு செய்யும் உதவி பரோபகாரம் எனப்படும். மேற்கோள்கள் அவன் தனக்காக அல்ல, உலகுக்காக வாழ்கிறான். லூகான் வெளிப்படையாகத் தெரியும்படியான தருமங்களில் பொன்னைப் புதைத்து வைக்காமல், மானிட இதயத்தில் தன் வைத்திய நிலையத்தை அமைப்பதே உண்மையான பரோபகாரம். ஹார்வி தானத்தைப் போல் பரோபகாரமும் ஒருவருடைய வீட்டிலிருந்தே ஆரம்பமாக வேண்டும். இதை மையப் புள்ளியாக வைத்துக் கொண்டு, நம்முடைய ஆதரவும் அன்பும். விரிவடைந்து கொண்டேயிருக்கும் வட்டத்தின் மேல் வட்டமாகப் பெருகி வரவேண்டும். லாம்ப் மற்றவர்களுடைய நன்மைக்காகத் தன்னுடைய ஓய்வு, தன் உதிரம், தன் செல்வம் ஆகியவற்றில் ஒரு பகுதிகூட அளிக்க முடியாதவன் இரக்கமற்ற இழிமகனாவான். ஜோ. அன்னா பெய்லி குறிப்பபுகள் பகுப்பு நல்லொழுக்கங்கள்
பல தொழில் என்பது குறித்த தேற்கோள்கள் ஒவ்வொன்றும் தொடக்கத்தில் முறுக்காயிருக்கும். எதுவும் நீடித்திருப்பதில்லை. டிரைடன் அடிக்கடி மாறுபவர்கள் மிகவும் பலவீனமான மனம் படைத்தவர்களாயும், மிகவும் கடின இதயம் பெற்றவர்களாயும் இருப்பார்கள் என்பதைக் கண்டுகொள்ளலாம். ரஸ்கின் மனிதர்கள் பல சந்தர்ப்பங்களில் பயனற்றிருப்பதற்கு ஒரு முக்கிய காரணம், அவர்கள் பல நோக்கங்கள், தொழில்களில் சிந்தையைச் சிதறவிடுதலாகும். எம்மன்ஸ் பல விஷயங்களைத் தொடங்குபவன் எதையும் முடிக்க மாட்டான். ஸி. ஸிம்மன்ஸ் உருண்டுகொண்டிருக்கும் கல்லில் ஒன்றும் ஒட்டாது. பப்ளியஸ்ஸைரஸ் சிலர் முதலில் சொற்கலைஞர்கள் பிறகு, கவிஞர்கள் பிறகு, விமர்சகர்களாகி இறுதியில் மூடர்களாவர். போப் குறிப்புகள் பகுப்பு தொழில்கள்
பலாத்காரம் அல்லது வன்முறை என்பதை உலக சுகாதார அமைப்பு கீழ்வருமாறு வரையறை செய்துள்ளது ஒரு நபர், குழு அல்லது சமூகத்திற்கெதிராக காயம், மரணம், உளவியல் தீங்கு, வளர்ச்சியின்மை அல்லது இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்படியாக அல்லது இவை நிகழ அதிகம் வாய்ப்புகளை உருவாக்கும்படியாக, உண்மையாகவோ அல்லது அச்சுறுத்தும்படியாகவோ உடல் வலிமை, அதிகாரத்தை வேண்டுமென்றே பயன்படுத்துவது வன்முறையாகும். மேற்கோள்கள் பலாத்காரத்தினால் வெல்பவன் பாதி எதிரியைத் தான் வெல்கிறான். மில்டன் பலாத்காரத்திலிருந்து நன்மை எதுவும் ஒரு காலத்தும் வருவதில்லை. லூதர் பலாத்காரக் களியாட்டங்கள் பலாத்கார முடிவுகளையே அடைகின்றன. ஷேக்ஸ்பியர் பலாத்காரமான எதுவும் நிலையாக நிற்பதில்லையென்று நான் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன். மார்லோ ஈக்களை வதைப்பதில்கூடநம்பிக்கையில்லை. மகாத்மா காந்தி பலாத்காரப் போராட்டத்திற்குப் பயிற்சி பெறுவதில் கொலை செய்து பழக வேண்டியிருப்பது போல் அஹிம்சையில் பயிற்சி பெறுவதற்கு ஒருவன் தானாக உயிர்துறக்கப் பழகவேண்டும். மகாத்மா காந்தி பலாத்காரம், தண்ணீரைப் போல், தான் வெளியேறுவதற்கு வழி கிடைத்துவிட்டால், மேலும் அதிக வேகத்துடன் பாய்ந்து செல்லும், மகாத்மா காந்தி ஆயிரம் தடவைகள் பலாத்காரம் தோல்வியுற்ற பின்னும், நாம் அது வென்றுவிடும் என்று மேலும் நம்பும் அளவுக்கு. நம் மனங்களில் அதற்கு அவ்வளவு பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது. விநோபா பாவே உண்மை என்னவென்றால், ஒருவன் செய்த பலாத்காரத்திற்கு இரண்டாமவன் அதிகப் பலாத்காரத்தைக் கையாள்கிறான். அதாவது, சொற்பத் தீமை செய்ததற்குக் கூடுதலான தீமையைத் திருப்பியளிக்கிறான். மூன்றாமவன் மேலும் அதிகமாகச் செய்கிறான். இவ்வாறு இறுதியில். இக்காலத்தில் நடைபெறும் சர்வ வியாபகமான யுத்தம் ஏற்படுகின்றது. மகாத்மா காந்தி இவ்வுலகில் எக்காலத்தும் பகைமை பகைமையால் தணிவதில்லை. பகைமை அன்பினாலேயே தணியும். புத்தர் குறிப்புகள் பகுப்பு தீயொழுக்கங்கள்
பழக்கம் என்பது குறித்த தேற்கோள்கள் மனித இயற்கையன ஆழ்ந்தமைந்த சட்டம், பழக்கம். கார்லைல் ஓடைகள் ஆறுகளாவது போலவும், ஆறுகள் கடல்களில் பாய்வது போலவும். எல்லாப் பழக்கங்களும் கண்ணுக்குத் தெரியாமல் சிறிது சிறிதாக ஒன்றாய்ச் சேர்ந்துவிடுகின்றன. டிரைடன் அறிவிலி ஒருவன் ஒரே கதையை நாள்தோறும். ஆண்டு முழுவதும். உன்னிடம் சொல்லிவந்தால், நீ அதையும் நம்பி விடுவாய். பர்க் நல்ல செயல்களைச் செய்து பழக்கமாகும் பொழுது. அவை எளிதாக விளங்குகின்றன. அவை எளிதாயிருக்கும் பொழுது. நாம் அவைகளில் மகிழ்ச்சியடைகிறோம். அவைகளை அடிக்கடி செய்கிறோம் திரும்பத்திரும்பச் செய்வதால், அவை ஒரு பழக்கமாகிவிடுகின்றன. டில்லோட்ஸன் பழக்கத்தின் சங்கிலிகள் பொதுவாக அவை இருப்பதாகவே உணர முடியாதபடி அவ்வளவு சிறியவையாய் இருக்கும். அவை வலிமை பெற்று உடைக்க முடியாதபடி இறுகும்வரை. நாம் அவைகளை உணர்வதில்லை. ஜான்ஸன் பழக்கத்தைத் தடுக்காவிடில், அது விரைவில் அவசியமாகி விடும். அகஸ்டைன் நாம் அனைவரும் பழக்கத்தின் அடிமையாயிருக்கிறோம். ஃபான்டெயின் உலகத்தின் சுதந்தரத்திற்காக உயிரைத் தியாகம் செய்ய மனிதர்கள் முன்வருவார்கள். ஆனால், தங்களுடைய பழக்கங்களாகிய அடிமைத் தளைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள அவர்கள் சிறு தியாகங்கூடச் செய்யமாட்டார்கள் என்பது ஆச்சரியமல்லவா? புருஸ் பார்ட்டன் மனிதன் பலவீனம் துயரம் எல்லாவற்றிற்கும் எப்பொழுதும் காரணமாயிருப்பது பலவீனமான சிந்தனைப் பழக்கமே. ஹொரேஸ் ஃபிளெச்சர் 'பிளேக்' நோய் ஒட்டுவாரொட்டியாகப் பக்கத்தில் வருபவர்களையும் எப்படிப் பாதிக்கின்றதோ, அதே போல், கெட்ட பழக்கங்கள் முன்மாதிரிகளாயிருந்த மற்றவர்களையும் பற்றிக் கொள்கின்றன. பீல்டிங் பழக்கம் இயற்கையைவிடப் பத்து மடங்கு அதிகம். வெல்லிங்டன் உணர்வுகள் கல்லாக இறுகிப் பழக்கங்களாகின்றன. எல். இ. லாண்டன் ஒரு செயலை விதைத்தால், பழக்கத்தை அறுவடை செய்யலாம். பழக்கத்தை விதைத்தால், ஒரு குணத்தை அறுவடை செய்யலாம். குணத்தை விதைத்தால் வாழ்வின் இறுதி இலட்சியத்தை அறுவடை செய்யலாம். நெடுநாள். வழக்கங்களை உடைப்பது எளிதன்று தன் வாழ்க்கையின் போக்கை மாற்றிக்கொள்ள ஒருவன் முயற்சி செய்தால், அது வீண் வேலையாகும். ஜான்ஸன் குறிப்புகள் பகுப்பு உளவியல்
ஹொரேஸ் பிளெட்சர் ஆகஸ்ட் 10, 1849 1919 என்பவர் ஒரு அமெரிக்க உணவியலாளர் ஆவார், இவர் "தி கிரேட் மாஸ்டிகேட்டர்" என்ற புனைப்பெயரைப் பெற்றிருந்தார். உணவை விழுங்குவதற்கு முன் நன்கு மெல்லவேண்டும் என்று வாதிட்டார். மேற்கோள்கள் மனிதன் பலவீனம் துயரம் எல்லாவற்றிற்கும் எப்பொழுதும் காரணமாயிருப்பது பலவீனமான சிந்தனைப் பழக்கமே. குறிப்புகள் பகுப்பு 1849 பிறப்புக்கள் பகுப்பு 1919 இறப்புக்கள் பகுப்பு அமெரிக்கர்கள்
பழமை அல்லது பழைமை என்பது தொன்மையைக் குறிப்பதாகும். இது குறித்த மேற்கோள்கள் பழமையின் உறவுகளை அறுத்துவிடும் எதிர்காலத்தை நான் விரும்பவில்லை. ஜியார்ஜ் எலியட் ஆகப் பழங்காலத்தில் இருந்தவர்களும் இப்பொழுதும் நம்மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஜியார்ஜ் எலியட் எதிர்காலத்தை அறிந்துகொள்ள வேண்டுமானால், பழமையை ஆராய்ந்து பார். கன்ஃபூஷியஸ் பழமையைப்பற்றி நமக்கு எவ்வளவு தெரியாதோ, அவ்வளவு அதை நாம் மதிக்கிறோம். தியோடோர் பார்க்கர் இப்பொழுது பழமையானவை என்று கருதப்பெறும் விஷயங்கள் ஒரு காலத்தில் புதுமைகளாக இருந்தன. இன்று நாம் மாதிரிகளாக்க் கொண்டிருப்பவை. வருங்காலத்தில் மாதிரிகளாக் விளங்கும். டானிடஸ் காலம் புனிதமாக்குகின்றது. நெடுங்காலத்திற்கு முந்திய விஷயம் சமயமாகிவிடுகின்றது. ஷில்லர் குறிப்புகள் பகுப்பு காலம்
பாராட்டுதல் என்பது வாழ்த்துதல், ஊக்குவிதலின் வெளிப்பாடாகும். மேன்மைக்கு அடுத்தபடி அதைப் பாராட்டுதல் மேன்மையாகும். தாக்கரே எந்த மனிதரையும் நாம் குறைவாக மதிப்பிடக்கூடாது. தொழிலாளி தன் முன்னிலையில் தன் வேலையைக் குறைவாகப் பேசுவதை விரும்பமாட்டான். டி. ஸேல்ஸ் மற்றவர்களுடைய நற்செயல்களைப்பற்றிச் சிந்திப்பதில் மகிழ்ச்சியடையாதவன் எவ்வித நற்செயலையும் செய்ய முடியாது. லவேட்டர் பாராட்டு உன்னதமான உள்ளங்களை மேலும் ஊக்குவிக்கும் பலவீனமானவர்கள் பாராட்டோடு திருப்தியடைந்துவிடுவார்கள். கோல்டன் பாராட்டுவதில் தாமதம் செய்தல் அன்புக் குறைவையும். பொறாமை உணர்ச்சியையும் காட்டும். எச். மோர் குறிப்புகள் பகுப்பு உரையாடல் பகுப்பு கருப்பொருட்கள்
பாவனை அல்லது பாசாங்குத்தனம் என்பது ஒருவரிடம் உண்மையில் இல்லாத நல்லொழுக்கங்கள், தார்மீக அல்லது சமய நம்பிக்கைகள், கொள்கைகள் போன்றவற்றைக் கொண்டிருப்பதாக நடிப்பது. போலியான பணிவு அகங்காரமாகும். போலியான பெருமை கீழ்த்தரமான நடத்தையாகும். போலியான புகழ் கட்டற்ற வாழ்வாகும். போலியான ஒழுக்கம் கபடமாகும். போலியான அறிவு நடித்து ஏய்ப்பதாகும். புளுயெர் ஒரு மனிதனிடம் யோக்கியதை எவ்வளவு அதிகமாயுளதோ, அந்த அளவுக்கு அவன் ஒரு ஞானியைப்போல நடிக்கமாட்டான். லவேட்டர் குணமோ, அந்தஸ்தோ உயர உயர பாவனை செய்தல் குறைந்து வரும். ஏனெனில், அப்பொழுது பாவனை செய்ய வேண்டிய அவசியம் குறைவு. புல்வர் உண்மையான பெருமை வேரூன்றி வளர்ந்துவிடும் அப்பொழுது பாவனைகள். வாடிய மலர்களைப் போல உதிர்ந்து விடும். போலிகள் நீடித்து நிற்கமாட்டா. எலிபெரோ குறிப்புகள் பகுப்பு தீயொழுக்கங்கள் பகுப்பு உரையாடல்
பிடிவாதம் குறித்த மேற்கோள்கள் பிடிவாதமுள்ள மனிதன் அபிப்பிராயங்களைக் கொண்டிருப்ப தில்லை. ஆனால், அவைகளே அவனைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன ஏனென்றால், ஒரு தவறு அவனைப் பிடித்துக்கொண்டால். அதைப் பிசாசைப் போல் மிகவும் பிரயாசைப்பட்டுத்தான் விரட்ட வேண்டியிருக்கும். பட்லர் சிலரே. மிகச்சிலரே தங்கள் தவறுதலை ஒப்புக்கொள்வர். ஸ்விஃப்ட் படிப்பில்லாத அற்பமான மனிதனுக்குப் பிடிவாதமும், வழக்குப் பேசுதலும் பொதுவான குணங்கள். அவனுக்கே அவை பொருத்தமானவை. தவறு கூடுதலாயிருந்தால், பிடிவாதமும் அதிகமாயிருக்கும். திருமதி நெக்கெர் பிடிவாதமும், விவாதத்தில் காரமும் தவற்றுக்குச் சிறந்த அத்தாட்சிகள். கழுதையைப் போல் பிடிவாதமுள்ள வெறுக்கத் தகுந்த பிராணி வேறு என்ன இருக்கின்றது? மாண்டெயின் பிடிவாதம் பலவீனருடைய வலிமையாகும். தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு, உண்மையையும். நியாயத்தையும் சட்டத்தையும், ஒழுங்கையும். கடமையையும், தாராளத்தையும் அடிப்படையாகக் கொண்டு உறுதியாயிருந்தால் ஞானிகளின் பிடிவாதமாகும். லவேட்டர் பிடிவாதமும் முரண்பாடும் காகிதக் காற்றாடிகளைப் போன்றவை அவைகளை இழுத்துவிட்டுக்கொண்டிருக்கும் வரைதான் அவை உயரே இருக்கும். மற்றவர்களுடைய அபிப்பிராயங்களிலிருந்து மிகவும் மாறுபட்டிருப்பவர்கள் தங்கள் அபிப்பிராயங்களே உண்மையானவை என்று நம்பிக்கொண்டிருப்பர். மகின்டோஷ் குறிப்புகள் பகுப்பு கருப்பொருட்கள் பகுப்பு தீயொழுக்கங்கள்
பிணையம், உத்தரவாதம், ஜாமீன் என்பது கடன் வாங்கியவர் கடன்கட்ட தவறிவிட்டால் கடன் வாங்குபவரின் கடனுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு தரப்பினரின் வாக்குறுதியை உள்ளடக்கியது. குறித்த தேற்கோள்கள். தான் சுதந்தரமாக வாழ விரும்புபவன் மற்றொருவருக்காகப் பிணையாகக்கூடாது. ஃபிராங்க்லின் உன்னுடைய கலைசிறந்த நண்பனுக்காகவும் பிணைபோவதில் எச்சரிக்கையாக இருக்கவும். பர்லே யாராவது ஒரு நண்பர் தமக்கு ஜாமீனாய் இருக்கும்படி வேண்டினால், உன்னால் இயன்ற தொகையைக் கொடுத்து உதவிசெய், அதற்கு மேலும் அவர் உன்னை வற்புறுத்தினால், அவர் உன் நண்பர் அல்ல, உங்கள் நட்பும் கெடும். ஸர் வால்டர் ராலே குறிப்புகள் பகுப்பு சட்டமும் அரசாங்கமும் பகுப்பு பொருளியல்
பிதிரார்ச்சிதம் என்பது தந்தை வழிமுன்னோர் தேடிய சொத்துகள் ஆகும். இது குறித்த மேற்கோள்கள். தங்கள் குழந்தைகளுக்கு அதிகமான செல்வத்தைத் தேடி வைத்து. அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாகப் பயிற்சி அளிக்காமல் விட்டுவிடுதல், தங்கள் குதிரைகளை உயரமாக வளர்த்து. அவைகளைப் பயன்படாமல் நிறுத்தி வைப்பது போலாகும். சாக்ரடிஸ் தன் வாரிசுக்காகத் தான் பட்டினி கிடந்து ஒரு மனிதன் செல்வம் சேர்த்து வைப்பது எவ்வளவு அறிவீனம்! இது நண்பனை விரோதியாக்குவது போன்றது. நீ மரிக்கும் பொழுது உன் வாரிசு நீ விட்டுச் செல்லும் செல்வத்தின் அளவில்தான் மகிழ்ச்சி அடைவான். ஸெனீகா குறிப்புகள் பகுப்பு குடும்பம் பகுப்பு பொருளியல் பகுப்பு சட்டமும் அரசாங்கமும்
பிரபுக்கள் என்பவர்கள் எஜமானர், நிலக்கிழார், தலைவர் போன்றோர் ஆவர். இவர்கள் ஆட்சியாளரைப் போல செயல்பட்டு மற்றவர்கள் மீது அதிகாரத்தையும், கட்டுப்பாடுகளையும் செலுத்துபவர்களாவர். மேற்கோள்கள் இப்பொழுதுள்ள பிரபுக்களின் முன்னோர்கள் எவர்கள் என்பதைக் கடவுள்தான் அறிவார்! டிஃபோ சிலர் எப்பொழுதும் மற்றவர்களுக்கு மேலாகவே இருப்பர். இன்றுள்ள ஏற்றத்தாழ்வை அழித்துவிட்டால், அது நாளை மறுபடி தோன்றிவிடும். எமர்ஸன் சில மனிதர்கள் பூட்ஸுகளும் முள் ஆணிகளும் குதிரைகளைக் குத்தி ஓட்டுவதற்காகக் கால்களில் அணிந்து கொள்ளப்படுபவை முள் ஆணிகள் அணிந்து கொண்டு குதிரை சவாரி செய்யவும், இலட்சக்கணக்கான மக்கள் சேணமும் இலகான்களும் அணிந்துகொண்டு தங்கள் மீது சவாரி செய்யக் காத்திருக்கவும் ஆண்டவன் அவர்களைப் படைத் திருக்கிறான் என்று நான் நம்பவே முடியாது. குவிஸோட் வேலை செய்யும் தேவை எதுவுமில்லாமல், தங்களுடைய அளவற்ற நிலபுலன்களிலிருந்து வரும் வாடகையைக் கொண்டு சோம்பேறித் தனமாக வாழுபவர்களைத் தான் பிரபுக்கள் என நாம் அழைக்கிறோம். நிக்கோலோ மாக்கியவெல்லி பிரபுவர்க்கம் எது? உண்டாக்காமல் உண்பவர், உழையாமல் வாழ்பவர், உத்யோகங்களை வகிக்கத் திறமையின்றி வகிப்பவர், கெளரவங்களைத் தகுதியின்றி அபகரித்துக் கொள்பவர் இவரே பிரபுக்கள். ஜெனலல் பாய் குறிப்புகள் பகுப்பு செல்வம் பகுப்பு நபர்கள்
பயணம் என்பது ஒப்பீட்டளவில் தொலைதூர புவியியல் இடங்களுக்கிடையேயான மக்களின் இயக்கமாகும். இது கால்நடையாக, மிதிவண்டி, மோட்டார் ஊர்திகள், தொடருந்து, படகு, வானூர்தி அல்லது பிறவற்றினாலோ, சாமான்களுடனோ அல்லது இல்லாமல் செய்யும் பயணத்தை உள்ளடக்கியது. மேற்கோள்கள் ஒவ்வொரு மனிதனும் பிரயாணம் செய்வது உசிதமில்லை அது அறிவாளியை மேலும் அறிவாளியாக்கும் மூடனை அதிக மூடனாக்கும். ஃபெல்ட்ஹாம் வீட்டிலே சோம்பேறியாயிருந்து, வாலிபத்தை உருவில்லாத சோம்பலில் கழிப்பதைவிட வெளியே சென்று உலகத்தின் ஆச்சரியங்களைப் பார். ஷேக்ஸ்பியர் நீ உன் நாட்டைவிட்டு வெளியே செல்வதற்கு முன்னால் உன் நாட்டில் பெரும் பாகத்தை நன்றாகத் தெரிந்துகொள். ஃபுல்லர் இரயில் பிரயாணம் பிரயாணமே அன்று. அது ஓர் இடத்திற்குப் 'பார்ஸல்' போவது போலத்தான். ரஸ்கின் நாம் பிறந்து வளர்ந்த நாட்டிற்கு வெளியே யாத்திரை செய்வதுஅதாவது, மற்ற நகரங்கள். நாடுகள் முதலியவைகளைப் பார்த்து வருவது மனத்தை விரிவடையச் செய்யும். வாட்ஸ் குறிப்புகள் பகுப்பு கருப்பொருட்கள்
பிரார்த்தனை என்பது ஒரு வேண்டுகோள் செயலாகும். இது வழிபாட்டு இலக்குடன் தொடர்பு கொண்டு ஒரு பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதலை செயல்படுத்த முற்படுகிறது. மேற்கோள்கள் சில சிந்தனைகளே பிரார்த்தனைகளாகிவிடும். உடல் எந்த நிலையில் இருந்தாலும் ஆன்மா முழங்கால் பணிந்து வணங்கும் நேரமும் உண்டு. விக்டர் ஹியூகோ பிரார்த்தனை என்பது சொற்களை அடுக்குவது அன்று. மனப்பூர்வமானது ஆதரவற்ற நிலையை விளக்குவது அன்று. அதை உணர்வது பேச்சுத்திறன் அன்று. ஆனால், ஆன்மாவின் அந்தரங்க விசுவாசமாகும். எச் மோ பிரார்த்தனை என்பதைச் சுருக்கமாக விளக்கினால், அது நமது விருப்பத்தைக் கடவுள் பக்கமாகத் திருப்புவதாகும். பி புருக்ஸ் நம்முடைய பிரார்த்தனைகள் பொதுவான ஆசிகளை வேண்டியிருக்க வேண்டும். ஏனெனில், நமக்கு எவை நன்மையானவை என்பதைக் கடவுளே அறிவார். சாக்ரடீஸ் நாம் கடவுளிடம் எதை வேண்டிக்கொண்டாலும், நாமும் அதற்காக உழைப்போம். ஜெரிமி டெய்லர் கடவுள் நம்மிடமிருந்து தொலைவில் இருக்கிறார். ஆனால் பிரார்த்தனை. அவரை நம்முடைய பூமிக்குக் கொண்டுவந்து நம் முயற்சிகளோடு இணைத்துவிடுகின்றது. திருமதி டி. காஸ்பரின் சொற்கள் குறைந்துள்ள பிரார்த்தனை மேலானது. லூதர் காலையில் கடவுளைவிட்டு ஓடியவன் அன்று முழுவதும் அவரைக் கண்டுபிடிக்கமாட்டான். பனியன் நம் பிரார்த்தனைகள் காலையும் மாலையும் மேலே எழவேண்டும். நமது நாள்கள் கடவுளில் ஆரம்பித்துக் கடவுளிலே முடியவேண்டும். சானிங் பொறுமைதான் மிக உயர்ந்த பிரார்த்தனை. புத்தர் ஆன்மா பிரார்த்தனை என்ற சிறகைக் கொண்டு வானுலகுக்குப் பறந்து செல்கின்றது. தியானந்தான் நாம் கடவுளைக் காணும் கண். அம்ப்ரோஸ் பிரார்த்தனையில் சொற்களில்லாத இதயம். இதயமில்லாத சொற்களைவிட மேலானது. பனியன் உங்களுடைய வேலைகளைத் தொடங்கு முன்னால் அவைகளை வெற்றிகரமாக முடிப்பதற்காக ஆண்டவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். ஸெனஃபோன் குறிப்புகள் பகுப்பு சமயம் பகுப்பு உரையாடல் பகுப்பு நம்பிக்கைகள்
பிரிதல் அல்லது பிரிவு என்பது தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஒருவர் பிரிந்துசெல்லல் ஆகும். மேற்கோள்கள் நாம் ஒருவரையொருவர் அதைரியப்படுத்திக்கொள்ளக்கூடாது. விரைவில் பிரிந்துவிட வேண்டும் எல்லாப் பிரிவுபசாரங்களும் சட்டென்று முடிய வேண்டும். பைரன் பிரியும் பொழுது அன்பான வார்த்தைகள் சொல்ல வேண்டும். நீங்கள் வாழ்வில் மறுபடி சந்திக்காமலே இருக்கவும் கூடும் ரிச்டெர் சிறிது காலம் பிரிந்திருந்தால் அன்பு அதிகமாகும். நீண்ட காலம் அன்பை வதைத்துவிடும். மீராபோ குறிப்புகள் பகுப்பு கருப்பொருட்கள்
புகழ் என்பது மற்றவர்களால் நன்கு அறியப்பட்ட பேசப்படும் நிலை ஆகும். மேற்கோள்கள் புகழ், வீரச் செயல்களின் நறுமணம். சாக்ரடீஸ் உலகில் வேகமாக உயர்ந்து வருகிறவர்களை மனிதர்கள் மேலாக எண்ணுகிறார்கள். ஆனால், புழுதி வைக்கோல் கண்டு. இறகு முதலியவைகளைப் போல் எதுவும் அவ்வளவு வேகத்தில் மேலே எழுவதில்லை. ஹேர் உலகத்தின் புகழ், காற்றைப் போன்றது. ஒரு சமயம் இந்தப் புறமாக வீசும், பிறகு, அந்தப் புறமாக வீகம், திசை மாறும் பொழுதெல்லாம் அதன் பெயரும் மாறிவிடும். தாந்தே ஆசையுள்ளவர்களுக்குப் புகழ், தாகமுள்ளவர்களுக்கு உப்புநீர் போன்றது குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும். பெர்ஸ் புகழை வைத்துத் தகுதியை அளக்க முடியாது. தகுதியை ஓரளவு அறிய முயலலாம். அவ்வளவுதான். அது தற்செயலாக ஏற்படுவது. மனிதனின் குணத்தை வைத்தல்ல. கார்லைல் புகழ் என்பது என்ன? ஜனங்கள் உன்னைத் தெரிந்துகொள்ளும் நன்மை ஆனால், அவர்களைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது. அவர்களைப்பற்றி உனக்குக் கவலையும் கிடையாது. ஸ்டானிஸ்லாஸ் புகழைத் தேடி அலைவதைப் போன்ற சிரமமான வேலை உலகில் வேறில்லை. நீ திட்டம் தயாரிப்பதற்குள்ளேயே வாழ்க்கை முடிந்துவிடுகின்றது. புரூயெர் நல்ல சீலமுள்ள பெரிய மனிதனுக்கு உலகில் புகழ் உரியது. அவன் நினைவைச் சரித்திரம் போற்றுகின்றது. அது மக்களின் ஒழுக்கத்தை நெறிப்படுத்துகின்றது. அவனுடைய சொற்களும் செயல்களும் மக்களின் வாழ்க்கையில் கலந்து விளங்குகின்றன. இ. எவரெட் விரைவிலே புகழ் பெற்றுவிட்டவன் தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்வது பெரிய பாரந்தான். வால்டேர் புகழின் கோயிலில் செல்வம் மிகுந்த மூடர்களுக்கும். கெஞ்சிக் கேட்கும் போக்கிரிகளுக்கும். மனித சமூகத்தை அரிந்து தள்ளும் கொலைகாரர்களுக்கும் இடம் கிடைத்துவிடுகின்றது. ஸிம்மெர்மன் இறந்துபோன மனிதனின் இதயத்தின் மேல் வைக்கப்பெறும் மலர், புகழ். மதர்வெல் செத்த பிறகுதான் புகழ் வருமென்றால், எனக்கு அதைப்பற்றிய அவசரம் எதுவுமில்லை. மார்ஷியன் புகழ் நெருப்பைப் போன்றது. அதை மூட்டிவிட்டால் பிறகு காப்பது எளிது. ஆனால், அதை மூட்டுவது கடினம். பேக்கன் இந்த வாழ்க்கையில் அடையும் பேறுகளுள் புகழே முதன்மையானது உடல் மண்ணுக்குள் போன பின்பு பெருமையுள்ள பெயர் மட்டும் உயிருடன் வாழ்ந்து வருகின்றது. ஷில்லர் மனித சமூகத்தின் நன்மையை நாடி உழைப்பதன் மூலமே உண்மையான, நிலையான புகழை நிறுவ முடியும். சார்லஸ் ஸம்மர் புகழுக்குச் சுருக்குவழி மனச்சான்றின்படி நடத்தல். ஒரு சமூகத்தின் புகழும், ஒரு சகாப்தத்தின் புகழும் ஒருசில பெரிய மனிதர்களின் வேலையைப் பொறுத்தவை.அவர்களோடு அவைகளும் மறைந்துவிடுகின்றன. கிரிம் நமது புகழ் என்பது. ஆண்களும் பெண்களும் நம்மைப்பற்றி என்ன நினைக்கின்றனர் என்பது நம் பண்பு, இறைவனும் தேவர்களும் நம்மைப்பற்றி என்ன நினைக்கின்றனர் என்பது. பெயின் உனது குணம் சரியாயிருந்தால், உன் புகழும் சரியாயிருக்கும். நல்லெண்ணமும் பெயரும் பற்பல செயல்களை வைத்து உண்டாவது. ஆனால், இரண்டும் ஒரே செயலில் போய்விடவும் கூடும். ஜெய்ப்ரே குறிப்புகள் பகுப்பு கருப்பொருட்கள்
புத்தாக்கம் அல்லது புதியன படைத்தல் என்பது புதிதான ஒரு எண்ணக்கருவை அல்லது புதிய சிந்தனையைக் கொண்டு புதுமுறையையோ அமைப்பையோ, இயந்திரத்தைநோ வடிவமைத்து உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டுவருதல் ஆகும். மேற்கோள்கள் புதிதாக ஓர் இயந்திரத்தைக் கண்டுபிடிப்பவன் மனிதனின் ஆற்றலை வளர்ப்பதுடன், மனித சமூகத்தின் நல்வாழ்வையும் பெருக்குகிறான். பீச்செர் நாம் புதியதைக் கண்டுபிடிக்காவிட்டாலும், இருப்பதையாவது அபிவிருத்தி செய்ய முடியும். கோல்டன் குறிப்புகள் பகுப்பு கருப்பொருட்கள்
புதுமை என்பது புதியது, அல்லது அதன் தொடர்ச்சி ஆகும். மேற்கோள்கள் மனித சமூகத்தை ஆட்டிவைக்கும் உணர்ச்சிகளுள் புதுமை மோகமே மனத்தை அதிகமாகக் கவர்கின்றது. ஃபூட் புதிய வழக்கங்கள். அவை பரிகசிக்கத்தக்கவையாக இருந்தாலும், அவை எவ்வளவு இழுக்காக இருப்பினும், பின்பற்றப்பெறுகின்றன. ஷேக்ஸ்பியர் ஆழ்ந்த ஆராய்ச்சியில்லாத நம் மூளைகளுக்குத் திருப்தியுண்டாகும்வரை எல்லாம் ஏற்றுக்கொள்ளப்பெறும் பிறகு, பழகிப்போன விஷயங்கள் தீண்டுவாரில்லாமல் கிடக்கும். நாம் புதிய விஷயங்களையே நாடிச் செல்வோம். லூதர் குறிப்புகள் பகுப்பு கருப்பொருட்கள்
புன்மையான உணர்ச்சிகள் என்பது சிறுமையான, இழிவான உணர்ச்சிகள் ஆகும். இது குறித்த மேற்கோள்கள் காதலுக்கும் காமத்திற்குமுள்ள வேற்றுமை அதிகம் காதல் நிலைத்திருப்பது மற்றது ஆவியாகப் போய்விடுவது. அனுபவக்தினால் காதல் வளரும் காமம் நலிவடையும். காரணம் என்னவென்றால், ஒன்றில் ஆன்மாக்கள் இணைகின்றன. மற்றதில் புலனுணர்ச்சிகளே இணைகின்றன. பென் புன்மையான உணர்ச்சி பணத்திற்குக் கேடு ஆளுக்கு எதிரி மனத்திற்கு விரோதம் மனச்சாட்சியை அரிப்பது அறிவுக்குப் பலவீனம் புலன்களை மயக்குவது உடல் அனைத்திற்குமே தீயது பிளினி ஒரு பகைவனுக்கு அன்பு காட்டினால் அவன் உன் நண்பனாவான். ஆனால், புன்மையான உணர்ச்சி அப்படியல்ல. அதற்கு உபகாரம் செய்யச் செய்ய அதன் பகைமை அதிகரிக்கும். ஸா அதி குறிப்புகள் பகுப்பு தீயொழுக்கங்கள்
புன்னகை என்பது வாயின் இரு முனைகளுக்கும் அருகிலுள்ள தசைகளை நெகிழ வைப்பதன் மூலம் உருவாகும் முகபாவனையாகும். கண்களைச் சுற்றிலும் புன்னகையைக் காணலாம். மனிதர்களிடையே, இது இன்பம், மகிழ்ச்சி, கேளிக்கைகளின் வெளிப்பாடு ஆகும், ஆனால் சிலசமயம் விருப்பமில்லாத தர்மசங்கடத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். மேற்கோள்கள் சிரிக்க முடியாத முகம் நல்லதாயிருக்க முடியாது. மார்ஷியல் சிரிப்பு பகல் அமைதி இரவு புன்னகை அந்தி ஒளி. அது அவ்விரண்டுக்கும் நடுவே தவழ்ந்து, அவைகளைவிட மயக்கும் சக்தியுடையது. பீச்செர் அன்பு இன்பம், மகிழ்ச்சி ஆகியவற்றை அணிவது புன்னகை. அவை முகத்தின் சாளரத்தில் ஒளிரும் ஒளி. அதன் மூலம் ஒருத்தி தன் தந்தை கணவர் அல்லது நண்பருக்கு வரவு கூறி இன்புறுத்துகிறாள். பீச்செர் இயற்கையின் அழகுக்குக் கதிரொளிபோல, பெண்ணின் முகத்திற்கு அழகிய புன்னகை ஏற்றது. அது விகார முகத்திற்கும் அழகூட்டும். லவேட்டர் ஒருவர் புன்னகை புரியும் முறையைக்கொண்டு அவர் குணத்தைப்பற்றி ஏதாவது தெரிந்துகொள்ளலாம். சிலர் சிரிப்பதேயில்லை. ஆனால், இளிக்க மட்டும் செய்வார்கள். போவீ உரக்கச் சிரித்தல் சாதாரண மக்களின் மகிழ்ச்சியைக் காட்டுவது. அற்ப விஷயங்களிலேயே அவர்களுக்கு ஆனந்தம் வந்து விடும் உலகம் தோன்றிய நாள் முதல் உண்மையான புத்தி சாதுரியமோ பெருந்தன்மையோ பெருஞ்சிரிப்பை உண்டாக்குவதில்லை. நாகரிகமுள்ள கனவான் புன்னகையே புரிகிறார். அவர் சிரிக்கும் ஒளியைக் கேட்கவே முடியாது. செஸ்டர்ஃபீல்டு குறிப்புகள் பகுப்பு உடற்கூற்றியல் பகுப்பு உணர்வுகள்
புவி , கதிரவனில் இருந்து மூன்றாவதாக உள்ள கோள். விட்டம், நிறை, அடர்த்தி கொண்டு ஒப்பிடுகையில் சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கோள்களில் புவியும் ஒன்று. மேற்கோள்கள் வானுலகிலிருந்து ஆண்டு வரும் எங்கள் இறைவனின் பாத பீடமாகிய பூமித் தாயே! எங்களுடைய உடை, உயிர், உணவு, வீடு, பெற்றோர், தாதியர் எல்லாம் நீயே அருள்கின்றாய்! லாட்ஜ் முன்பு உயிரோடில்லாதிருந்த மண் எங்கேயிருக்கின்றது? மண் வெட்டியும் கலப்பையும் மண்ணிலுள்ள நம் முன்னோர்களையே கிளப்புகின்றன. மனிதர்களின் பூநதுகளிலிருந்தே நாம் அன்றாட உணவைப் பெறுகிறோம். யங் பூமியென்ற அரசாங்கத்தின்மீது இறைவனும், இயற்கையும் சேர்ந்து நடிகர்களைக் கொண்டு நிறப்புகின்றன. குறிப்புகள் பகுப்பு இயற்கை
பெண் வேட்டல் அல்லது பெண் விருப்பம் என்பது குறித்த மேற்கோள்கள் ஒரு பெண்ணை மணந்துகொள்ள நாடுவதில், அவளிடம் காட்டும் ஆதரவுகள் பயமுறுத்தும்படி இருக்கக்கூடாது. அவள் புரிந்து கொள்ளாத அளவுக்கு அற்பமாகவும் இருக்கக்கூடாது. ஸ்டெர்னே மௌனமாக மறுப்பவள் பாதி இசைகிறாள் என்று பொருள். ஒவிட் பெண் கேட்பதில் ஆண்கள் வசந்தகாலமாக ஏப்ரலாக இருக்கின்றனர். திருமணத்தில் பனிக்காலமாக டிசம்பராக இருக்கின்றனர். ஷேக்ஸ்பியர் நாவு ஒன்றுள்ள மனிதன், அதைக்கொண்டு ஒரு பெண்ணை அடைய முடியாவிட்டால், அவன் மனிதனே அல்லன். ஷேக்ஸ்பியர் குறிப்புகள் பகுப்பு திருமணம்
பெருந்தீனி என்பது தேவைக்கும் அதிகமாக உண்ணுதல் ஆகும். இது குறித்த மேற்கோள்கள் உண்பதைத் தவிர வேறு இன்பமேயில்லாதவர்கள் தாங்கள் உயிர் வாழ்வதன் காரணம், அது ஒன்றுதான் என்று கூறலாம். ஜூவினல் சில மனிதர்கள் விருந்துண்ணவே பிறந்தவர்கள். போராடுவதற்காக அன்று. போர்க்களத்திலே கூட ஊக்கமில்லாத அவர்கள் உள்ளங்களில் சாப்பாட்டைப்பற்றியே நினைவிருக்கும். சமையலறைதான் அவர்களுடைய ஆலயம் சமையற்காரனே அவர்களுடைய பூசாரி, உணவுண்ணும் மேசையே அவர்கள் பலி பீடம் வயிறே அவர்களுடைய கடவுள். பக் பெருந்தீனிதான் நம் குறைபாடுகளுக்கெல்லாம் காரணம் நம் பிணிகளுக்கெல்லாம் அடிப்படை பர்ட்டன் வயிற்றுக்கு அடிமையாயுள்ளவன் கடவுளைத் தொழுதல் அரிது. ஸா அதி குறிப்புகள் பகுப்பு தீயொழுக்கங்கள் பகுப்பு உணவு வகைகளும் பானங்களும்
பெருமை என்பது ஒருவரின் சுய பார்வை. பெருமை பெரும்பாலும் ஒருவரின் தேசம் தேசிய பெருமை , இனம் இனப் பெருமை அல்லது தோற்றம் பகட்டு பற்றிய உயர்ந்த கருத்தாக வெளிப்படுகிறது. பெருமை என்பது பெரும்பாலான தத்துவங்கள் மற்றும் முக்கிய உலக சமயங்களால் எதிர்மறையான பண்பாகக் கருதப்படுகிறது, ஆனால் சில தத்துவங்கள் இதை நேர்மறையாகக் கருதுகின்றன. பெருமைக்கு நேர்மாறானது பணிவு ஆகும். மேற்கோள்கள் பெருமை. வலிமையாயிருப்பதில் இல்லை. வலிமையைச் சரியாகப் பயன்படுத்துவதில் இருக்கின்றது. பெருமை என்பது ஒரு பெரிய உள்ளத்தின் பயனாகும். அதன் இலட்சியமன்று. வா. ஆல்ஸ்டன் தன் வாழ்க்கை தன் சமூகத்திற்கு உரியதென்றும் தனக்கு இறைவன் அருளியவையெல்லாம் மானிட சமூகத்திற்காக அருளியவை என்றும் ஓரளவு உணராத மனிதன் எவனும் உண்மையான பெருமையை அடைந்ததில்லை. ஃபிலிப்ஸ் புருக்ஸ் சிலர், பிறப்பிலேயே பெருமையுடன் வருகின்றனர். சிலர், பெருமையை அடைகின்றனர். சிலர்மீது பெருமை திணிக்கப் பெறுகின்றது. ஷேக்ஸ்பியர் குறிப்புகள் பகுப்பு தீயொழுக்கங்கள் பகுப்பு உணர்வுகள்
பெற்றோர் என்பது தங்கள் வாரிசை குழந்தை வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். மனித சிசுவிற்கு உயிரியல் அடிப்படையில் ஆண் பெண் என இரண்டு பெற்றோர்கள் இருப்பார்கள். ஆண், தந்தை என்றும் பெண், தாய் என்றும் அழைக்கப்படுவர். மேற்கோள்கள் கடவுளுக்கு அடுத்தபடியாக உங்கள் பெற்றோர்களைப் பேணுங்கள். பென் பெற்றோர்களின் குரல்கள் தெய்வங்களின் குரல்கள். ஏனெனில், அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இறைவனின் பிரதிநிதிகளாக விளங்குகின்றனர். நாம் நம் குழந்தைகளுக்குக் கற்பிப்பதுபற்றிப் பேசுகிறோம். நம் குழந்தைகளும் நமக்குப் போதிக்கின்றன என்பது நமக்குத் தெரியுமா? திருமதி ஸிகோர்னி பெற்றோர் சந்தேகிப்பவராயிருந்தால், குழந்தை தந்திரமுள்ளதாக இருக்கும். ஹாலிபர்டன் குறிப்புகள் பகுப்பு குடும்பம்
பேச்சு என்பது மனித தொடர்புகளின் குரல் வடிவமாகும். மேற்கோள்கள் எவரையும கையைப் பிடித்து இழுத்து உன் பேச்சைக் கேட்கும்படி நிறுத்தி வைக்காதே ஜனங்கள் உன் பேச்சைக் கேட்க விரும்பவில்லையானால், நீ உன் நாவை அடக்கிக் கொண்டு இருப்பதே நலம். செஸ்டர்ஃபீல்டு அதிகமாய்ப் பேசுபவர்கள் மிகவும் குறைவாய்ச் சிந்திப்பார்கள். டிரைடன் பேசுபவர்கள் நல்ல செயலாளர்களாக இருப்பதில்லை. ஷேக்ஸ்பியர் அதிகமாய்ப் பேசுதல் செருக்கின் அடையாளம் சொற்களை அள்ளிக் கொட்டுபவன் செயலில் கருமியாயிருப்பான். ஸர் வால்டர் ராலே உலகில் கனைக்கிற கழுதையைப் போலவே, கனைக்கிற மனிதர்களும் இருக்கின்றனர். பொருளில்லாமல் உரக்கக் கத்துவதைக் கனைத்தல் என்றுதானே சொல்ல வேண்டும்! எல். எஸ்டியேஞ்ச் பெரும் பேச்சாளர்கள் ஓட்டைப் பாத்திரங்களைப் போன்றவர்கள் அவைகளில் ஊற்றியனவெல்லாம் வெளியே போய்விடும். ஸி ஸிம்மன்ஸ் குறிப்புகள் பகுப்பு உரையாடல்
பேரறிவாளர் என்பவர் அறிவில் சிறந்தவர் என்பதாகும். மேற்கோள்கள் பேரறிவு இடைவிடாத கவனத்தின் மூலம் அமைவதைத் தவிர வேறில்லை. ஹெல்விடியஸ் பேரறிவு என்பது எனக்குத் தெரியாது அது உழைப்பும் ஊக்கமுமேயாகும். ஹோகார்த் பார்வையிலேயே விசேடத் திறமையுடன் பாாக்கும் உயர்ந்த ஆற்றலே பேரறிவு ரஸ்கின் பேரறிவாளர் தமக்கு வேண்டிய பாதைகளைத் தாமே அமைத்துக் கொள்வர். தமக்கு வேண்டிய தீபத்தையும் தாமே எடுத்துச் செல்வர். வில்மா பேரறிவாளர் பிறவியிலேயே அப்படியிருப்பவர் அவர்களைப் போதனை செய்து தயாரிக்க முடியாது. டிரைடன் பேரறிவாளனுடைய முதற்கடமையும், கடைசிக் கடமையுமாவது உண்மையில் பற்றுக்கொண்டிருத்தல். கதே அறிவைப் பெற்றுக்கொண்டு. அதை அபிவிருத்தி செய்து கொள்வதே பேரறிவாளனின் திறமை. ஜி. எலியா குறிப்புகள் பகுப்பு மனம்
எழுதுகோல் அல்லது எழுதி அல்லது பேனா எனப்படுவது, எழுத உதவும் ஒரு கருவி அகும். பேனா என்னும் சொல் ஆங்கிலத்தில் பென் என்னும் சொல்லில் இருந்து பெற்றது. மேற்கோள்கள் உலகத்தில் இரண்டே சக்திகள் இருக்கின்றன அவை வாளும் பேனாவும். இறுதியில் பின்னதே முந்தியதை வென்று விடுகின்றது. நெப்போலியன் வாள் விரைவாக வேலை செய்ய வேண்டும் பேனா நின்று நிதானித்தே வேலை செய்ய வேண்டும். ஜூலியா வார்ட்ஹோ எனது பழுப்பு நிறமான இறகுப் பேனாதான் இயற்கையின் தலைசிறந்த பரிசு. பைரன் வாளைத் தூக்கி எறியுங்கள் இராஜ்யங்களை வாளில்லாமலே காப்பாற்றலாம். பேனாவைக் கொண்டுவாருங்கள் புல்வெர் குறிப்புகள் பகுப்பு தொழினுட்பம்
ஜூலியா வார்ட்ஹோ , 27, மே, 1819 17, அக்டோபர் 17, 1910 என்பவர் ஒரு அமெரிக்க கவிஞரும், எழுத்தாளரும் ஆவார். இவர் பெண்களின் வாக்குரிமைக்காக வாதிடுபவராகவும், சமூக ஆர்வலராகவும் இருந்தார். மேற்கோள்கள் வாள் விரைவாக வேலை செய்ய வேண்டும் பேனா நின்று நிதானித்தே வேலை செய்ய வேண்டும். குறிப்புகள் பகுப்பு 1819 பிறப்புக்கள் பகுப்பு 1910 இறப்புக்கள் பகுப்பு அமெரிக்கர்கள்
பொது அறிவு என்பது பல்வேறு ஊடகங்கள் வழியாக காலப்போக்கில் குவிக்கப்படும் தகவல்கள் ஆகும். இது பொது நுண்ணறிவு மற்றும் அனுபவத்தின் தன்மையுடன் வலுவாக தொடர்புடையது. மேற்கோள்கள் தெளிவான சாதாரணப் பொது அறிவே வாழ்க்கையில் செல்லுபடியாகும் நாணயமாகும். யங் வாணிபத் தொழிலில் வெற்றி பெறுவது நிர்வாக ஆட்சித் திறனால், ஆட்சித் திறனுக்கு உறுதுணையாயிருப்பது பொது அறிவு பொது அறிவு என்பது. பொருள்கள் இருக்கிற நிலையில் அவைகளை அப்படியே தெரிந்துகொள்வது. செயல்களை எப்படிச் செய்ய வேண்டுமோ, அப்படியே செய்வதாகும் ஸி. இ. ஸ்டோ குறிப்புகள் பகுப்பு மனம்
பொய்மை என்பது குறித்த மேற்கோள்கள் உண்மையாயிருக்கத் தைரியம் கொள்ளுங்கள். பிறகு எதற்கும் பொய் சொல்ல வேண்டியிராது. ஹெர்பெர்ட் பொய்யின் பயன் யாரும் நம்மை நம்பாமை. நாம் உண்மையைச் சொல்லும் பொழுதும், அதையும் பிறர் நம்பமாட்டார். சர் வால்டர் ராலே கோழைகளைத் தவிர வேறு எவரும் பொய் சொல்லுவதில்லை. மர்ஃபி ஒரு பொய்யைச் சொல்பவன் எவ்வளவு பெரிய வேலையை மேற்கொள்கிறான் என்பதை உணர்வதில்லை அந்தப் பொய்யை நிலை நாட்டுவதற்கு அவன் மேலும் இருபது பொய்களை உண்டாக்க வேண்டும். போப் உலகில் இவ்வளவு அதிகமாகப் பொய் பரவியிருப்பதற்குக் காரணம், வேண்டுமென்றே ஆர்வமன்று' உண்மையைப்பற்றிய கவனமின்மைதான் காரணம். ஜான்ஸன் எதற்காகவும் நாம் பொய் பேசாதிருக்க வேண்டும். ஒன்று. தீமையில்லாத பொய் என்றும், மற்றொன்று. மனமாரச் சொன்னதன்று என்றும் எஎண்ண வேண்டாம். அவை அனைத்தையும் வெளியே தள்ளிவிடுங்டுங்கள். அவை சாதாரணமாயும் தற்செயலாயும் ஏற்பட்டிருருக்கலாம். ஆனால், அவை புகை படிந்த ஆபாசங்கள் நம் இதயங்களில் அவை ஒட்டியிராமல் கத்தமாக வெளியேற்றிவிட வேண்டும். அவைகளுள் எது பெரிது. எது மிகவும் மோசமானது என்று கவலையே வேண்டியதில்லை. ரஸ்கின் ஒருவன் பொய் சொல்லுவதை ஒரு நண்பன் கண்டுகொண்டு விட்டால், அது நட்புக்கே பெரிய அதிர்ச்சியாகும். அதுமுதல் நம்பிக்கையும் குறைந்து போகும். ஹாஸ்லிட் பாதி உண்மை முழுப் பொய்யாகும். உண்மையைப் பொய்யால் சோடனை செய்து தவறான முறையில் கூறுவோனே பொய்யர்களுள் இழிவானவன். இ. எல். மகூன் எல்லாவற்றிற்கும் மேலே இதை வைத்துக்கொள் நீ உனக்கு உண்மையாக நடந்துகொள் பிறகு இரவைப் பகல் தொடர்வது போல, நீ வேறு எந்த மனிதனுக்கும் பொய்யனாக மாட்டாய். ஷேக்ஸ்பியர் பொய்யன் கடவுளிடமும் தைரியமாயிருப்பான். ஆனால், மனிதர்களிடம் கோழையாகவே இருப்பான். மாண்டெயின் பொய்யினால் ஒருவன் அடையும் ஆதாயமெல்லாம் இதுதான். அவன் உண்மையைச் சொல்லும் போதும் எவரும் நம்பமாட்டார். அரிஸ்டாட்டில் ஒருவன் ஒரு பொய்யைச் சொல்லிவிட்டால், அவனுக்கு நல்ல நினைவு இருக்க வேண்டும். கார்னீலி பொய்யர்கள் எல்லா வெட்கத்தையும் விட்டவர்கள். அத்னால் எல்லா உண்மைகளையும் கைவிட்டவர்கள். துருக்கி நாட்டுச் சட்டத்தில் பல விஷயங்கள் எனக்கு உவப்பானவை அங்கே பிரசித்தமாகப் பொய் சொன்னதாக நிரூபிக்கப்பெற்றவர்களின் நெற்றியிலே சூடான இரும்பு கம்பியால் சூடு போடுகிறார்கள். மாண்டேகு சீமாட்டி பொய்யை எங்கே கண்டாலும் மிதித்து அணைத்துவிட வேண்டும். என்னைச் சுற்றி எங்காவது பொய் நடமாடுவதாய்ச் சந்தேகம் ஏற்பட்டால், தொற்று நோய்களுக்குச் செய்வது போல காற்றிலே புகையூட்டி வைப்பேன். கார்லைல் பாவத்திற்குப் பல கருவிகளுண்டு ஆனால், அவை அனைத்திற்கும் பொருந்தக்கூடிய கைப்பிடி பொய்தான். ஆ. வெ. ஹோம்ஸ் குறிப்புகள் பகுப்பு தீயொழுக்கங்கள் பகுப்பு சட்டமும் அரசாங்கமும்
மயிலை சீனி. வேங்கடசாமி பி. டிசம்பர் 16, 1900 ஜூலை 8, 1980 ஒரு தமிழறிஞரும், எழுத்தாளருமாவார். தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். நபர் குறித்த மேற்கோள்கள் வேங்கடசாமியின் தமிழ்ப்பணியை பாரதிதாசன் பின்வருமாறு பாராட்டியுள்ளார் தமிழையே வணிகமாக்கித் தன்வீடும் மக்கள் சுற்றம் தமிழிலே பிழைப்பதற்கும் தலைமுறை தலைமுறைக்குத் தமிழ் முதலாக்கிக் கொண்ட பல்கலைத் தலைவன் எல்லாம் தமிழ்ச் சீனி வேங்கடத்தின் கால்தூசும் பெறாதார் என்பேன் வெளியிணைப்புக்கள் சான்றுகள் பகுப்பு 1900 பிறப்புக்கள் பகுப்பு 1980 இறப்புக்கள் பகுப்பு இறந்த நபர்கள் பகுப்பு தமிழறிஞர்கள்
மகிழ்கலை அல்லது பொழுதுபோக்கு என்பது மகிழ்ச்சியை தருவிப்பதை நோக்காக கொண்ட கலைகளை மகிழ்கலைகள் எனலாம். மேற்கோள்கள் மனிதர்கள் எப்பொழுதும் வேலை செய்துகொண்டேயிருக்க முடியாது. அவர்களுக்கும் பொழுது போக்க வசதி வேண்டும். நல்ல பொழுதுபோக்குகள் கிடைக்காவிட்டால், அவர்கள் தீமையானவைகளில் ஈடுபட நேர்ந்துவிடும். ஓ. டி. யூயி பொழுதுபோக்கு என்பது சோம்பியிருத்தலன்று. உடலின் எந்தப் பகுதி வேலையால் களைத்துப் போயுள்ளதோ, அதை வேறு வேலையில் திருப்பிக் களைப்பைத் தீர்ப்பதாகும். பொழுதுபோக்கும் விளையாட்டுகள் ஒழுக்கத்திற்கு உகந்தவை மெல்லிய காற்று. நெருப்புக்கு உதவுவது போன்றவை அவை ஆனால், பலமான காற்று நெருப்பை அணைத்துவிடும். தாமஸ் அரிவாளுக்குச் சாணை பிடிப்பது போன்றது மனத்திற்குப் பொழுதுபோக்கு அது இல்லாவிட்டால் மனம் ஊக்கம் குன்றி மழுங்கிப் போகும். பிஷப் ஹால் குறிப்புகள் பகுப்பு கலை
பொறாமை அல்லது அழுக்காறு என்பது ஒரு உணர்ச்சி ஆகும். பொதுவாக பாதுகாப்பின்மை, பயம், பதட்டம் ஆகியவற்றின் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைக் குறிக்கிறது. பொறாமையானது பெரும்பாலும் கோபம், சோகம் மற்றும் வெறுப்பு போன்ற உணர்ச்சிகளின் கலவையாகும். மேற்கோள்கள் பொமையின் கண்களுக்குச் சிறு பொருள்களெல்லாம் மிகப் பெரியவைகளாகவும். குள்ளர்கள் பெரிய அசுரர்களாகவும், சந்தேகங்களெல்லாம் உண்மையாகவும் தோன்றும். செர்வான்டிஸ் பொறாமை முழுவதையும் ஆரம்பத்திலேயே கழுத்தை நெரித்துவிட வேண்டும். இல்லையெனில், அது வலிமையடைந்து உண்மையை வென்றுவிடும். டேவனன்ட் ஆட்சி புரியும் ஒருவன், தனக்கு அடுத்தாற்போல் பட்டத்திற்குரியவனிடத்தில் எப்பொழுதும் சந்தேகமும், துவேஷமும் கொண்டிருப்பான். டாஸிடஸ் தன் அண்டை வீட்டுக்காரனின் நற்குணத்தைப்பற்றிக் கேள்விப்படும்பொழுது எவன் வருத்தமடைகிறானோ, அவன் அதற்கு மாறான செய்தியைக் கேட்க இன்புறுவான். தங்களுடைய பண்புகளைக் கொண்டு புகழ் பெற முடியாதவர்கள். மற்றவர்களும் தங்கள் நிலைக்குத் தாழ்த்தப்பெற்றால், மகிழ்ச்சியடைவர். பொறாமையுள்ளவன் தன் தாழ்ச்சியை எப்பொழுதும் உணர்ந்திருப்பான். பிளினி அந்துப்பூச்சி ஆடையை அரிப்பது போல், அழுக்காறு மனிதனை அரித்துவிடும். கிரிஸோஸ்டம் அடுத்த வீட்டுக்காரன் வெற்றியடைவதில் பொறாமைக்காரன் உடல் மெலிவான். ஹொரேஸ் அழுக்காறு உடையார்க்கு அதுசாலும், ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது. திருவள்ளுவர் அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். திருவள்ளுவர் குறிப்புகள் பகுப்பு தீயொழுக்கங்கள் பகுப்பு உணர்வுகள்
மிகேல் தே சேர்வான்டிசு சாவேத்ரா , செப்தெம்பர் 29, 1547 ஏப்ரில் 22, 1616 ஒரு எசுப்பானிய புதின எழுத்தாளரும், கவிஞரும், நாடகாசிரியரும் ஆவார். முதலாவது தற்காலப் புதினம் எனச் சிலரால் கூறப்படும் டான் கிஃகோட்டி என்னும் இவரது புதினம் மேல் நாட்டு இலக்கியத்தில் சிறப்பு வாய்ந்தது எனவும், உலகின் மிகச் சிறந்த புதினங்களுள் ஒன்று எனவும் கூறப்படுகிறது. மேற்கோள்கள் அழகு எல்லா அழகும் காதலைத் தூண்டுவதில்லை. சில அழகிகள் கண்ணுக்கு இனிமையாய்த் தோன்றுவரே ஒழிய அன்புசர்சிகளை எழுப்புவதில்லை. இரக்கம் கடவுளுடைய சக்திகள் யாவும் ஒன்றுபோல் சமமாக இருந்த போதிலும், அவருடைய நீதியைப் பார்க்கினும் இரக்கம் அதிகப் பிரகாசமாக விளங்குகின்றது. செயல் நல்ல செயல்கள் நம்மை உயர்த்துகின்றன. நாம் நம் செயல்களின் புதல்வர்களாய் இருக்கிறோம். சோகம் துக்கம் மனிதர்களுக்காக ஏற்பட்டது. விலங்குகளுக்காக அன்று ஆனால், மனிதர் அதிகமாய்த் துக்கம் கொண்டாடினால், அவர்கள் விலங்குகளுக்கு மேலல்லர். நூலாசிரியர் தந்தையார் தாயார் எவரும் தம் குழந்தைகள் விகாரமாக இருப்பதாக எண்ணுவதில்லை தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ளும் இந்தக் குணம், உள்ளத்தால் படைக்கும் படைப்புகளில் மேலும் அதிகமாயிருக்கும். பழமொழிகள் அனுபவம் விஞ்ஞானங்களுக்கு எல்லாம் தாய் பழமொழிகள் அந்த அனுபவத்திலிருந்து பெறப்பட்டவை. பழமொழிகளில் உண்மையாக இல்லாதவை மிகச் சிலவே இருக்கும். நீண்ட அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட சிறுவாக்கியங்கள் பழமொழிகள். பொறாமை பொமையின் கண்களுக்குச் சிறு பொருள்களெல்லாம் மிகப் பெரியவைகளாகவும். குள்ளர்கள் பெரிய அசுரர்களாகவும், சந்தேகங்களெல்லாம் உண்மையாகவும் தோன்றும். மரியாதை மரியாதையாகப் பேசுவதும் நடப்பதும் செலவில்லாத செல்வங்கள். குறிப்புகள் பகுப்பு 1547 பிறப்புகள் பகுப்பு 1616 இறப்புகள் பகுப்பு கவிஞர்கள் பகுப்பு எழுத்தாளர்கள்
தீபாவளி விளக்கு 100 தீபாவளி , அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மேற்கோள்கள் "தீபாவளி" என்ற சொல்லுக்கு ஒர் ஏற்பாடு அல்லது விளக்குகளின் வரிசை என்று பொருள். ஒளி என்பது கடவுள், உண்மை மற்றும் ஞானத்திற்கான அடையாளமாகக் கருதப்படுகிறது. அனந்தானந்த் ராம்பச்சன் ஆரியர்கள், திராவிடர்களை ராமர் மற்றும் கிருஷ்ணரின் பிறந்தநாளை தீபாவளி விழாவாகக் கொண்டாடச் செய்தனர். அதேபோல் வடக்கில் இருந்து வந்தவர்கள் ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை நாளகாக் கொண்டாடச் செய்தனர். அவ்வளவு தான். இந்த தினத்தைக் கொண்டாடுவதில் வேறு எந்த நன்மையும் பாராட்டத்தக்க காரணமும் இல்லை பெரியார் வெ.ராமசாமி தந்தை பெரியார் . . , பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவனம், 2005, ப. 502 அயல்நாட்டில் கிறிஸ்மஸைப் போலவே, தீபாவளியும் பரிசுகளை வாங்குவதற்கும் பரிமாறிக்கொள்வதற்கும் உகந்த நேரமாக இந்தியாவில் உள்ளது. பாரம்பரியமிக்க இந்த திருவிழாவின் ஆரம்பகாலங்களில் இனிப்புகள் மற்றும் உலர்ந்த பழங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. ஆனால் தற்போது இது வணிக திருவிழாவாக இது மாறியுள்ளது. மேலும், ஆன்மிக பங்களிப்புகளை இது குறைக்கிறதோ எனும் கவலைக்கு வழிவகுக்கிறது. , , 20 2011 வெளியிணைப்புகள் பகுப்பு இந்து மதம்
பொறுமையின்மை என்பது அமைதியின்மை மற்றும் தாமத்ததை பொறுத்தக் கொள்ளாமல் பதட்டமடைதல் ஆகும். மேற்கோள்கள் பொறுமையின்மை சிறு குளிரைப் பெரிய ஜூரமாக்கிவிடும் ஜூரத்தைப் பிளேக் ஆக்கிவிடும் அச்சத்தை ஏக்கமாக்கிவிடும். கோபத்தை வெறியாக்கிவிடும் சோகத்தைப் பெருந்துக்கமாக்கிவிடும். ஜெரிமி டெயிலர் வயதோ, சோகமோ உதிரத்தை உறிஞ்சுவதைக்காட்டிலும், பொறுமை, பொறுமையின்மை அதிகமாக உறிஞ்சிவிடும். கிளியான் குறிப்புகள் பகுப்பு தீயொழுக்கங்கள் பகுப்பு உணர்வுகள் பகுப்பு உளவியல்