Questions
stringlengths 4
72
| Answers
stringlengths 11
172
|
---|---|
கண்டமாலை வீக்கம் கரைய | கொள்ளுகாய் வேளை செடி வேர், மஞ்சள் சேர்த்து பாலில் அரைத்து பூசி வரவும். |
நரம் இசிவு சிரங்கு, கண்டமாலை தீர | உத்தாமணி இலையை வேப்பெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம். |
கண்டமாலை புண் தீர | மாவிலங்கபட்டை கஷாயம் காலை, மாலை சாப்பிடவும். |
தண்டுவடவலி குணமாக | வாத நாராயணன் இலை 5கிராம் தேன் சேர்த்து சாப்பிட்டு வர குணமாகும். |
முதுகு, தோள்பட்டை, புட்டாவலி | வாதநாராயணன் இலைகளை விளக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க குணமாகும். |
இதய படபடப்பு குறைய | மாசிக்காயை பால்விட்டு உரசி காலை, மாலை இரு வேளை அரைகிராம் நாவில் சுவைக்கலாம். எச்சரிக்கை அதிகமானால் மயக்கம் வரும். |
இதயம் படபடப்பு நீங்க | தினசரி 1 பேரிக்காய் சாப்பிட சரியாகும். |
இதய நோய் சாந்தமாக | துளசி இலை சாறு, தேன் வெந்நீரில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவும். |
இதயத்தில் குத்தும், வலி குணமாக | கருந்துளசி இலை, செம்பருத்தி பூ கஷாயம் 10 நாட்கள் சாப்பிடவும். |
இதயம் பலம் பெற | தினசரி ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டு வரலாம். |
இருதயம் வலுவாக | அத்தி பழத்தை காய வைத்து பொடியாக்கி 1கரண்டி சாப்பிட்டு வரலாம். |
இதய நடுக்கம் | திருநீற்று பச்சிலை முகர்வதால் சாந்தமாகும். |
இதயத்திற்கு பலம் கிடைக்க | மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிடவும். ஜீரண சக்தியையும் அதிகரிக்கும். |
நெஞ்சுவலி | இலந்தைபழம் சாப்பிடலாம். |
மார்பு துடிப்பு, இதயவலி தீர | சந்தனதூள் கஷாயம் செய்து குடிக்கலாம். |
இதய பலவீனம் தீர | செம்பரத்தை பூ உலர்த்தி பொடி, மருதம் பட்டை தூள் சம அளவு பாலில் சலந்து பருகலாம். |
மாரடைப்பு | தான்றிக்காய் பொடி 2 சிட்டிகை தேனில் கலந்து நாக்கில் தடவலாம். |
நெஞ்சுவலி பெற | இஞ்சி துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம். |
இதயவலி குணமாக | துளசி விதை 100 கிராம், பன்னீர் 125 கிராம், சர்க்கரை 25 கிராம் ஒன்றாகக் கலக்கி 2 வேளை சாப்பிடவும். |
இதயநோய் குரைமாக | மருதம்பட்டை செம்பருத்தி பூ கஷாயம் 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம். |
மார்பு வலி | இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, தேன் கலந்து சாப்பிட வலி நிற்கும். |
சீரற்ற இதயதுடிப்பு சரியாக | கருஞ்துளசி இலை மருதம்பட்டை கஷாயம் சாப்பிடலாம். |
இதயநோய் உள்ளவர்கள் | டீ குடிக்கலாம், காபி தவிர்த்தல் நலம். |
கழிச்சல் குணமாக | மாங்கொட்டை பருப்பு, மாதுளம்பூ, ஓமம் சேர்த்து பொடி செய்து மோரில் சாப்பிட குணமாகும். |
சுகபேதியாக | நுனாவேரை கஷாயமாக்கி குடிக்கவும். |
சீதபேதி குணமாக | புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சமஅளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிட குணமாகும். |
பேதி குணமாக | அவரை இலை சாறை தயிருடன் சாப்பிட பேதி நிற்கும். |
தொடர் வயிற்றுப் போக்கு | பப்பாளிப்பழம் சாப்பிட குணமாகும். |
காலரா குணமாக | மாங்கொட்டை பருப்பை பொடிசெய்து பசும்பாலில் கலந்து கொடுக்கவும். |
பேதி நிற்க | கொய்யா வேரை கொதிக்க லைத்து காலையில் குடிக்கலாம். |
சீதபேதி அஜீரணம் உள்ளவர்கள் | ஆளிவிரைகளை அரைத்து சாப்பிடலாம். |
இரத்தபேதி தீர | இலந்தைபட்டை கஷாயம் செய்து குடிக்கலாம். |
மலத்துடன் இரத்தம் வருவதை தடுக்க | மாதுளம் பூ இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வரலாம். |
சீதபேதி குணமாக | நுங்கை தோல் உரிக்காமல் சாப்பிட்டு வரலாம். |
மேகம், வயிற்றுப்போக்கு தீர | நீர்முள்ளி விதையை பொடிசெய்து 1கிராம் பாலில் கலந்து கலந்து சாப்பிட்டு வரலாம். |
வயிற்றுப்போக்கு குணமாக | மாதுளம் பழத்தை வேக வைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து உண்ண எல்லாவகை வயிற்று போக்கும் தீரும். |
குமட்டல், வயிற்றுபோக்கு தீர | எலுமிச்சம்பழ சாறில் சீரகம் ஊறவைத்து காய வைத்து சுவைத்து மென்று சாப்பிடலாம். |
பேதி | வேப்பிலை வசம்பு கஷாயம் குடிக்கலாம். |
உஷ்ணபேதி குணமாக | உலர்ந்த மாம்பூ, சீரகத்தை சேர்த்து தூள் செய்து சர்க்கரை சேர்த்து சாப்பிட வேண்டும். |
சீதபேதி, இரத்தபேதி குணமாக | அசோகு பூ, மாம்பருப்பு சம அளவு பொடி செய்து 3 சிட்டிகை பாலில் உட்கொள்ளலாம். |
வாந்தி, பேதி அடங்க | கொய்யா இலை காய்ச்சி அரை மணிக்கு ஒரு மடக்கு வீதம் குடிக்கலாம். |
இரத்த பேதி நிற்க | இலந்தை பட்டை கஷாயம் செய்து குடிக்கலாம். |
இரத்த கழிச்சல் தீர | கட்டுகொடி இலை சாறை சர்க்கரை கலந்து கொடுக்கலாம். |
இரத்த போக்கு நிற்க | நெய்யுடன், செம்பருத்தி பூவை சேர்த்து வதக்கி சாப்பிட்டு வர உடனே நிற்கும். |
இரத்த வாந்தி சரியாக | ஆடாதொடை இலை சாறு தேன் கலந்து சாப்பிட சரியாகும். |
இரத்தம் தூய்மையாகி மேகரோக கிருமிகள் நீங்க | கருஞ்செம்பை இலைசாறு 10 மி.லி. சாப்பிட்டு வரலாம். |
ஈரல் வலி | ஆரஞ்சுப்பழம் தினந்தோறும் சாப்பிட்டு வர குணமாகும். |
நுரையீரல்,கபம் தீர | துத்திபூ பொடி சர்க்கரை கலந்து பாலில் சாப்பிடவும். |
ஈரல் வியாதி | கரிசலாங்கண்ணி கீரை தொடாந்து சாப்பிடவும். |
ஈரல் வீக்கம் குணமாக | நொச்சி இலையை மைய அரைத்து உள்ளுக்கு 10மி.லி. குடிக்க குணமாகும். |
நுரையீரல் வலி | ஆடாதோடா இலைசாறு தேன் கலந்து சாப்பிடலாம். |
நுரையீரல் பலப்பட | தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல், இருதயம் பலம் பெறும். |
நுரையீரல்,புற்று நோய் வராமல் தடுக்க | முசுமுசுக்கை இலையை பொடியாக்கி மாதம் இரண்டு தடவை சாப்பிடலாம். |
நுரையீரல் புண் ஆற | மருதம்பட்டை ஆடாதொடை பொடி வெள்ளாட்டு பாலில் கலந்து குடித்து வரலாம். |
நுரையீரல், சளி இருமல் தீர | பிரதமண்டு இலைபொடி. விதை பொடி தேனில் கலந்து சாப்பிடலாம். |
ஆஸ்துமா, இரப்பிருமல், நுரையீரல் | பிரமதண்டு சமூல சாம்பல் 3 அரிசி எடை தேனில் சாப்பிடலாம். |
நுரையீரல், சளி அடைப்பு தீர | இஞ்சி, வெள்ளெருக்கும்பூ, மிளகு சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வர தீரும். |
நுரையீரல் வலுவடைய | சுண்டை வற்றல் உணவில் அடிக்கடி சேர்க்க நுரையீரல் வலுவடையும். |
வாய் திக்குதல் | வில்வ இலையை தினமும் காலையில் மென்று தின்று வர குணமாகும். |
பேசும் திறன் அதிகரிக்க | தாமரை இதழ் தினமும் ஒன்று சாப்பிட்டு வரலாம். |
திக்கி பேசுதல் குணமாக | வசம்புபொடி அருகம்புல் சாறில் கலந்து குடித்துவர திக்கிபேசுதல் சரியாகும். |
திக்கி பேசுதல் சரியாக | இலந்தை இலை சாறு சாப்பிட்டு வர திக்கி பேசுதல் குணமாகும். |
பாரிசு வாதம் | நன்னாரிவேர் 20கிராம் போட்டு சுண்ட காய்ச்சி வடிகட்டி சாப்பிட்டு வரக் குணமாகும். |
வாதவலி தீர | ஊமத்தை இலை நல்லெண்ணையில் வதக்கி கட்டலாம். |
வாதநோய் தீர | கட்டுக்கொடி இலை, சுக்கு, மிளகு சேர்த்து காய்ச்சி கொடுக்க வேண்டும். |
பக்கவாதம் தீர | சங்கிலை வேர் பட்டை அரைத்து வெந்நீரில் குடிக்க வேண்டும். |
குடல் வாதம் | பொருமலுக்கு சொன்ன மருந்தை சாப்பிட்டு வர தீரும். |
முடக்குவாதம் தீர | பாதாளமூலி முள் நீக்கி விளக்கெண்ணையில் வாட்டி கட்டலாம். ஒத்தடமும் கொடுக்கலாம். |
வாதமூட்டு வலி குணமாக | வெங்காய சாறை கடுகெண்ணையில் கலந்து வலி உள்ள இடத்தில் தடவவும். |
சன்னி, பிடரி, இசிவு, வாதநோய்கள் தீர | வேப்பெண்ணையில் தலை முழுகி வர நோய்கள் தீரும். |
வாதநோய் குணமாக | குப்பைமேனி இலைசாறு எடுத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர குணமாகும். |
கீழ்வாதம் தீர | முருங்கைப்பட்டை, கடுகு சேர்த்து அரைத்து பற்றிடலாம். |
வாதநோய், வாதவீக்கம் தீர | மிளகாய் பூண்டு விதை கஷாயம் செய்து 2வேளை குடிக்கவும். |
வாதபிடிப்பு வீக்கம் தீர | முடக்கத்தான் இலை விளக்கெண்ணையில் வதக்கி கட்டி வரவும். |
வாதவலி, வாதநோய் குணமாக | கட்டுக்கொடி வேர் சிறிதளவும்,1துண்டு சுக்கு 4மிளகுடன் காய்ச்சிகொடுக்கலாம். |
வலிப்பு நோய் தடுக்க | தினசரி ஆட்டுப்பால் சாப்பிட்டு வரவும். |
முடக்குவாதம் நீங்க | மாவிலங்க இலை கஷாயம் சமஅளவு தேங்காய் பாலில் 3வேளை குடிக்கவும். |
வாதம், பிடிப்பு குணமாக | முடக்கத்தான் இலைகளை நறுக்கி அரிசிமாவுடன் கலந்து அடை செய்து சாப்பிடலாம். |
கீழ்வாத வீக்கம் குறைய | சக்தி சாரணை சாற்றுடன் நல்லெண்ணை கலந்து காய்ச்சி தடவி வரலாம். |
வாதவீக்கம், கீழ்வாயு தீர | சங்கிலை, வேம்பு,குப்பைமேனி. நாயுருவி, நொச்சி அவித்து வேது பிடிக்கலாம். |
வாதத்தால் ஏற்படும் உடல்வலி தீர | நொச்சி இலையை கொதிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் குளிக்கலாம். |
வாதவலி | ஊமத்தை இலை நல்லெண்ணையில் வதக்கிகட்டலாம். |
மூலம் | நாயுருவி விதைபொடி துத்தி கீரையுடன் சேர்த்து சமைத்து உண்ணலாம். |
வாதவீக்கம், குடைச்சல் வலி தீர | வாதநாராயணன் இலை சாறு அவுன்ஸ் குடித்து வரலாம். |
வாதம் | நன்னாரி வேர் கஷாயம் செய்து சாப்பிடலாம். |
மலச்சிக்கல் தீர | அகத்திகீரை வாரம் 1 நாள் சமைத்து உண்ண வேண்டும். |
மலச்சிக்கல் நீங்கி மூலம் கட்டுப்பட | பப்பாளிபழம் தினந்தோறும் சாப்பிட்டு வர குணமாகும். |
மலச்சிக்கல் குணமாக | பார்லி அரிசி 20கிராம், புளிய இலை 40 கிராம் காய்ச்சி கஷாயமாக்கி குடித்து வரலாம். |
மலச்சிக்கல் நீங்க | முளைக்கீரை சாப்பிட்டு வரலாம். |
அடிக்கடி மலம் கழிக்கும் உணர்ச்சி நீங்க | மாதுளம் பூசாறு 15மி. லி. கற்கண்டு சேர்த்து 3 வேளை சாப்பிடவும். |
தேங்கியுள்ள மலத்தை வெளிப்படுத்த | சாறுவேளை செடி, பொடி, சுக்குதூள் கலந்து சாப்பிடலாம். |
மலச்சிக்கல் தீர | இரவில் மாம்பழம் சாப்பிடலாம். |
மலக்கட்டு தீர | முள்ளங்கி இலைசாறு 5மி.லி.3 வேளை சாப்பிட்டு வரலாம். |
மலச்சிக்கலுடன் குளியலால் வரும் காய்ச்சல், தலைவலி, சளிப்பிடிப்பது | வெந்நீர் ஒத்தடம் வயிற்றில்கொடுத்து மலம் கழிக்க தீரும். |
மலச்சிக்கலை போக்க | நார்த்தங்காய் ஊறுகாய் சாப்பிடவும், ஜீரண சக்தியும் பெருகும். |
மலம் கழித்தல் கிராணி | பாதாளமூலி சதையை சிறுதுண்டுகளாக்கி மிளகுதூள் சேர்த்து சாப்பிட தீரும். |
இறுகி போன மலம் இளக | 10மி.லி. விளக்கெண்ணையில் 3துளி எருக்கு இலைசாறு விட்டு சாப்பிடலாம். |
மலக்கட்டு நஞ்சு நீங்க | மகழவித்து பருப்பை பொடி செய்து 5கிராம் பாலில் சாப்பிட்டு வர மலக்கட்டு நஞ்சு நீங்கும். |
உள்மூலம் | காட்டு துளசியின் விதைகளை காய வைத்து இடித்து தூள் செய்து அரை ஸ்பூன் பாலுடன் சேர்த்து குடிக்கவும். |
பவுத்திரத்தின் தொந்தரவு நீங்க | பூண்டு, எலுமிச்சைசாறு. உப்பு சேர்த்து ஊறவைத்து பூடை மென்று தின்று வரலாம். |