text
stringlengths 16
178
|
---|
அடுத்தாரைக் கெடுத்து அன்னம் இட்டாரைக் கன்னம் இடுகிறான். |
அடுத்து அடுத்துச் சொன்னால் தொடுத்துக் கெடுப்பான் மடந்தை. |
அடுத்து வந்தவர்க்கு ஆதரவு சொல்வோன் குரு. |
அடுப்பனலில் வெண்ணெயை வைத்த கதை. |
அடுப்பு எரிந்தால் பொரி பொரியும். |
அடுப்புக் கட்டிக்கு அழகு வேண்டுமா? |
அடுப்புநெருப்பும் போய் வாய்த்தவிடும் போச்சு. |
அடுத்த வீட்டுக்காரனுக் கதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் லாபம், |
அடுத்த வீட்டுக்காரனுக்கு அதியோகம் வந்தால் அண்டை வீடு குதிரை லாயம். |
அடுத்துமுயன்றாலும் ஆகுநாள்தான் ஆகும். |
அடே அத்தான், அத்தான், அம்மான் பண்ணினாற் போலிருக்கவில்லை அடா. |
அடைந்தோரை ஆதரி. |
அடைபட்டுக் இடக்கிறான் செட்டி, அவனை அழைத்து வா பணம்பாக்கி என்கிறான் பட்டி. |
அடையலரை அடுத்து வெல்லு. |
அடைப்பைப் பிடுங்கினால் பாம்பு கடிக்கும். |
அடைமழைக்குள்ளே ஓர் ஆட்டுக்குட்டி செத்தது போல. |
அடைமழை விட்டும் செடிமழை விடவில்லை. |
அஷ்ட தரித்திரம் தாய் வீடு, அதிலும் தரித்திரம் மாமியார் வீடு. |
அஷ்டதரித்திரம் பிடித்தவன் அமராவதியில் வாழ்கிறானென்று நித்திய தரித்திரம் பிடித்தவன் நின்றநிலையிலே பிட்டுக்கொண்டு வந்தான். |
அட்டமத்துச் சனி கிட்டவந்தது போல. |
அட்டமத்துச் சனி நட்டம் வரச்செய்யும். |
அட்டமத்துச் சனி பிடித்தது, பிட்டத்துத் துணியையும் உரிந்துகொண்டது. |
அட்டமத்துச் சனியை வட்டிக்கு வாங்கினாற்போல. |
அட்டாதுட்டி கொள்ளித்தேன். |
அட்டாலும் பால் சுவையில் குன்றாது |
அட்டைக்கும் திருத்தியில்லை, அக்கினிக்கும் திருத்தியில்லை. |
அட்டையை எடுத்து மெத்தையில் வைத்தாலும் செத்தையைச் செத்தையை நாடும். |
அட்டையைப் பிடித்து மெத்தையில் வைத்ததுபோல. |
அணி பூண்ட நாய்போல. |
அணியத்திலே கிழிஞ்சாலும் கிழிஞ்சுது, அமரத்திலே இழிஞ்சாலும் கிழிஞ்சது. |
அணில் ஊணும், ஆமை நடையும். |
அணில் எஏறவிட்ட நாய் (பார்ப்பது) போல |
அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும். |
அணில் நொட்டினதும் தென்னமரம் வீழ்ந்ததும். |
அணு மகா மேரு ஆமா? |
அணிற்பிள்ளைக்கு நுங்கு அரிதோ, ஆண்டிச்சி பிள்ளைக்கு சோறு அரிதோ? |
அணுவும் மலையாச்சு, மலையும் அணுவாச்சு. |
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது. |
அணை கடந்த வெள்ளத்தை மறிப்பவர் ஆர்? |
அண்டங்காக்காய் குழறுகிறாப்போல. |
அண்டத்தில் இல்லாததும் பிண்டத்தில் உண்டா? |
அண்டத்திற்கு உன்ளது பிண்டத்திற்கும் உண்டு. |
அண்டத்துக்கொத்தது பிண்டத்துக்கு. |
அண்டத்தைச் சுமக்கிறவனுக்குச் சுண்டைக்காய் பாரமா? |
அண்டத்தைக் கையில் வைத்தாட்டும் பிடாரிக்குச் சுண்டைக்காய் எடுப்பது பாரமா? |
அண்ட நிழலில்லாமற்போனாலும் பேர் ஆலாலவிருக்ஷம் |
அண்டை அயல் பார்த்துப் பேசுகிறது. |
அண்டமும் பிண்டமும், அந்தரங்கமும் வெளியரங்கமும். |
அண்டர் எப்படியோ தொண்டரும் அப்படியே. |
அண்டாத பிடாரி ஆருக்கு அடங்குவாள்? |
அண்டைமேலே கோபம் கடாவின் மேலே காட்டினதுபோல. |
அண்டையிற் சமர்த்தன் இல்லாத ராஜாவுக்கு அபகீர்த்தி வரும் |
அண்டை வீட்டுக் கடனும் பிட்டத்துச் சிரங்கு மாகாது. |
அண்டை வீட்டுக்காரி பின்ளைபெற்றாளென்று அசல் வீட்டுக்காரி இடித்துக் கொண்டதுபோல. |
அண்டை வீட்டுச் சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி |
அண்டை வீட்டுச் சுப்பிக்கும் எதிர்வீட்டுக் காமாட்சிக்குமா கவலை? |
அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டித் தீர்ப்பான் |
அண்ணனார் சேனையிலே அன்ளி உண்ணப்போகிறாள். |
அண்ணனிடத்தில் ஆறுமாதம் வாழ்ந்தாலும் அண்ணியிடத்தில் அரை நாழிகை வாழலாமா? |
அண்ணனானவன் தம்பிக்கு மூத்தவன்; |
அண்ணனுக்குத் தம்பி அல்லவென்று போகுமா? |
அண்ணனுக்குப்பெண் பிறந்தால் அத்தை அசல் நாட்டாள். |
அண்ணற ஆயிரம் பொன்னிலும் நிண்ணற ஓருகாசு பெரிது. |
அண்ணனைக் கொன்றபழி, சந்தையிலே தீர்த்துக்கொள்ளுகிறதுபோல |
அண்ணன் உண்ணாதது எல்லாம் மைத்துனிக்கு லாபம். |
அண்ணன் கொம்பு பம்பள பளாச்சு. |
அண்ணன் சம்பாதிக்கிறது, தம்பி அரைஞாண் கயிற்றுக்குச் சரி. |
அண்ணன் தம்பிதான் சென்மப் பகையாளி. |
அண்ணன் தம்பி வேண்டும் இன்னம் தம்பிரானே |
அண்ணன்தான் கூடப் பிறந்தான் அண்ணியும் கூடப் பிறந்தாளோ? |
அண்ணன் பெரியவன், அப்பா, காலைப்பிடி. |
அண்ணன் பெரியவன், சிற்றப்பா, சுருட்டுக்கு நெருப்புக் கொண்டுவா. |
அண்ணன்பேரிலிருந்த கோபத்தை நாய்பேரிலாற்றினான். |
அண்ணாக்கும் தொண்டையும் அதிர அடைத்தது. |
அண்ணாணங்கை அப்ஸரஸ்திரீ. |
அண்ணாண்டி, வாரும், சண்டையை ஒப்புக்கொள்ளும். |
அண்ணாமலையாருக்கு அறுபத்துநாலுபூசை, ஆண்டிகளுக்கு எழுபத்துநாலு பூசை. |
அண்ணாமலையார் அருளுண்டானால் மன்னார்சாமி மயிரைப் பிடுங்குமா? |
அண்ணாவி பிள்ளைக்குப் பணம் பஞ்சமா, அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் பஞ்சமா? |
அண்ணாவுக்கு மனது வரவேணும், மதனி பிள்ளை பெறவேணும். |
அதமனுக்கு ஆயிரம் ஆயுசு. |
அதிக ஆசை அதிக நஷ்டம். |
அதிக ஆசை மிக தரித்திரம். |
அதிக கரிசனமானாலும் ஆமுடையானை அப்பா என்றழைக்கிறதா? |
அதிகார மில்லாவிட்டால் பரியாரம் வேணும். |
அதிகாரியுடனே எதிர்பண்ணலாமா? |
அதிகாரியும் தலையாரியும்கூடி விடியுமட்டும் திருடலாம் |
அதிகாரி வீட்டில் திருடித் தலையாரி வீட்டில் வைத்ததுபோல. |
அதிகாரி வீட்டுக் கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம் |
அதிக்கிரமமான ஊரிலே கொழிக்திற மீனும் சரிக்கு மாம். |
அதிசயமான ரம்பை அரிசி கொட்டுகிற தொம்பை |
அதியாக் குறியால் கருமாரிப் பாய்ச்சல். |
அதிர அடித்தால் உதிர விளையும் |
அதிரந் தடித்தாருக்கு ஐயருமில்லை, பிடாரியாருமில்லை. |
அதிருஷ்டமும் ஐசுவரியமும் ஒருவர் பங்கல்ல. |
அதிருஷ்டம் ஆறாய்ப் பெருகுகிறது |
அதிருஷ்டம் இருந்தால் அரசு பண்ணலாம். |
அதிருஷ்டம் இல்லாதவனுக்கு கலப்பால் வந்தாலும், அதையும் பூனை குடிக்கும். |
அதிருஷ்டம் கெட்ட கழுக்காணி. |
அதிருஷ்டம்கெட்டதுக்கு அறுபதுநாழியும்தியாச்சியம். |