text
stringlengths 16
178
|
---|
அம்மான் வீட்டு வெள்ளாட்டியை அடிக்க அதிகாரியைக் கேட்கவேண்டுமா? |
அம்மி மிடுக்கோ அரைப்பவள் மிடுக்கோ? |
அம்மிமிதித்து அருந்ததி பார்த்தது போலப் பேசுகிறாள். |
அம்மி யிருந்து அரணை அழிப்பான். |
அம்மியும் குழவியும் ஆகாயத்தில் பறக்கச்சே, எச்சிற் கல்லை எனக்கு என்னகதி என்றாற் போல |
அம்மியும் குழவியும் ஆடிக்காற்றில் பறக்கச்சே, இலவம் பஞ்சு எனக்கென்னகதி என்றதாம். |
அம்முக்கள்ளி ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா? |
அம்மை குத்தினாலும் பொம்மை குத்தினாலும் வேண்டியதரிசி. |
அம்மைக் கமர்க்களம் ஆக்கிப்படை, எனக் கமர்க்களம் பொங்கிப்படை. |
அம்மைக்கு அமர்க்களம் பொங்கிப் படையுங்கள். |
அம்மை வீட்டுத் தெய்வம் நம்மைவிட்டுப்போமா? |
அம்மையாரே வாரும், கிழவனைக் கொள்ளும். |
அம்மையார் எப்பொழுது சாவார், கம்பளி எப்பொமுது நமக்கு மிச்சமாகும்? |
அம்மையார் நூற்கிற நூலுக்கும் பேரன் அரைஞாண் கயிற்றுக்கும் சரி. |
அம்மையார் பெறுவது அரைக்காசு, அவருக்குத் தலை சிரைக்க முக்காற்காசு. |
அம்மையார்க்கு என்ன துக்கம், கந்தைத் துக்கம். |
அயலார் உடைமைக்குப் பேயாய்ப் பறக்கிறான். |
அயலார் உடைமையில் அந்தகண்போல் இரு. |
அயலான் வாழப் பகலே சரக்கெடுப்பது. |
அயல் வீட்டான் பிள்ளை ஆபத்துக் குதவுவானா? |
அயல் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே. |
அயன் இட்ட எழுத்தில் அணுவளவும் தப்பாது. |
அயன் இட்ட கணக்கு ஆருக்கும் தப்பாது. |
அயன் சமைப்பை ஆராலும் தன்ளக்கூடாது. |
அயிரையும் சற்றே அருக்குமாம் பிட்டுக்குள் போட்டுப் பிசறாமல். |
அயோக்கியர் அழகு அபரஞ்சிச் சிமிழில் நஞ்சு. |
அய்யன் அளந்தபடி. |
அய்யா, அய்யா, அம்மா குறைக் கேழ்வரகும் அரைக்க வரச்சொன்னாள். |
அய்யாசாமிக்கு கலியாணம், அவரவர் வீட்டிலே சாப்பாடு. |
அய்யா தாசி கவனம்பண்ண அஞ்சாளின் சுமையாச்சுது. |
அய்யாத்துரைக்கு (அப்பாசாமிக்கு)க் கலியாணம், அவரவர் வீட்டிலே சாப்பாடு, கொட்டுமுழக்குக் கோயிலிலே, வெற்றிலை பாக்குக் கடையிலே, சுண்ணாம்பு சூளையிலே. |
அய்யா பாட்டுக்கு அஞ்சடியும் ஆறடியும் தாண்டும். |
அய்யாவையர் கூழுக்கு அப்பையங்கார் தாதாவா? |
அரகர என்கிறவருக்குத் தெரியுமா, அமுது படைக்கிறவனுக்குத் தெரியுமா? |
அள என்பது பெரிதோ, ஆண்டிக்கு இடுவது பெரிதா? |
அரகரன் ஆண்டாலென்ன, மனிதன் ஆண்டாலென்ன? |
அரக்குமுத்தி தண்ணீர்க்குப் போனாள், புண் பிடித்தவன் பின்னாலே போனான். |
அரங்கின்றி வட்டாடலும், அறிவின்றிப் பேசலும் ஒன்று. |
அரசனில்லாப்படை வெட்டுமா? |
அரசனுக்கு ஒருசொல், அடிமைக்குத் தலைச்சுமை. |
அரசனுக்குத் துணை வயவானள். |
அரசனுக்கு வலியார் அஞ்சுவது எளியார்க்கு அனுகூலமாகிறது. |
அரசனும் அரவும் சரி. |
அரசனும் அழலும் சரி. |
அரசனும் நெருப்பும் பாம்பும் சரி. |
அரசனைக்கண்ட கண்ணுக்குப் புருஷனைக்கண்டால் கொசுப்போல இருக்கிறது. |
அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டதுபோல. |
அரசன் அருள் அற்றால் அனைவரும் அற்றார். |
அரசன் அளவிற்கு (வரை) ஏறிற்று (எட்டியது). |
அரசன் அன்று கொல்லும், தெய்வம் நின்றுகொல்லும். |
அரசன் இல்லாதநாடு, அச்சில்லாத தேர். |
அரசன் இல்லாத நாடு, புருஷன் இல்லாத வீடு. |
அரசன் உடைமைக்கு ஆகாயவாணி சாக்ஷி. |
அரசன் எப்படியோ அப்படியே குடிகள். |
அரசன் எவ்வழி அவ்வழி குடிகள். |
அரசன் ஒன்றை இகழ்ந்தால் ஒக்க இகழவேண்டும், ஒன்றைப் புகழ்ந்தால் ஒக்கப் புகழவேண்டும். |
அரசன் கல்லின்மேல் கத்தரி (வழுதுணை) காய்க்கும் என்றால், கொத்து ஆயிரம் குலை ஆயிரம் என்பார்கள். |
அரசன் குடுமியையும் பிடிக்கலாமென்று அம்பட்டன் வேலையை விரும்புவதுபோல. |
அரசன் வழிப்பட்டது அவனி. |
அரசன் வழிப்படாதவன் இல்லை. |
அரசில்லா நாடு அலக்கழிந்தாற்போல. |
அரசில்லாப்படை வெல்லுவதரிது. |
அரசுக்கு இல்லை சிறுமையும் பெருமையும். |
அரசுடையானை ஆகாயம் காக்கும். |
அரணை அலகு திறக்காது. |
அரணை கடித்தால் அப்பொழுதே மரணம். |
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். |
அரண்மனை காத்தவனும் அடுப்பங்கரை காத்தவனும் வீண்போகிறதில்லை. |
அரண்மனைவாசல் காத்தவனும் பரிமடைகாத்தவனும் பழுதுபோவதில்லை. |
அரண்மனைக்கு ஆயிரஞ்செல்லும், குடியானவன் என்ன செய்வான்? |
அரத்தை அரம்கொண்டும் வயிரத்தை வயிரம் கொண்டும் அறுக்க வேண்டும். |
அரபிக்குதிரையிலும் ஐயம்பேட்டைத் தட்டுவாணி நல்லது. |
அரமும் அரமும் கூடினால் கின்னரம். |
அரவத்தைக் கண்டால் கீரி விடுமா? |
அரவுக்கு இல்லை சிறுமையும் பெருமையும். |
அரனருள் அல்லாது அணுவும் அசையாது. |
அரிஅரி என்றால் ராமா ராமா என்கிறான். |
அரி என்கிற அக்ஷரம் தெரிந்தால் அதிகாரம் பண்ணலாம். |
அரி என்கிற அக்ஷரம் தெரிந்தால் அதிக்கிரமம் பண்ணலாமா? |
அரி என்றால் ஆண்டிக்குக் கோபம், அர என்றால் தாதனுக்குக் கோபம். |
அரிஹர பிரமாதிகளாலும் முடியாது. |
அரிசி என்று அள்ளிப்பார்ப்பாருமில்லை. உமி என்று ஊதிப்பார்ப்பாருமில்லை. |
அரிசி அள்ளின காக்கை போல. |
அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக்கட்டி மூன்றுவேண்டும். |
அரிசி உண்டானால் வரிசையும் உண்டு, அக்காள் உண்டானால் மச்சானும் உண்டு. |
அரிசி உழக்கானாலும் அடுப்பு மூன்று. |
அரிசி கொண்டு (உண்ண) அக்காள் வீட்டுக்குப்போவானேன்? |
அரிசி மறந்த கூழுக்கு உப்பு ஒன்றுகுறையா? |
அரிசிக்குத்தக்க உலையும் ஆமுடையானுக்குத் தக்க வீறாப்பும். |
அரிசிக்குத் தக்க கனவுலை |
அரிசிப்பகையும் ஆமுடையான் பகையும் உண்டா? |
அரிசிப் பொதியுடன் திருவாரூர். |
அரிசியும்கறியும் உண்டானால் அக்காள்வீடு வேண்டுமா? |
அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீடு. |
அரிதாரம் கொண்டுபோகிற நாய்க்கு அங்கு இரண்டடி இங்கு இரண்டடி. |
அரிது அரிது அஞ்செழுத்து உணர்தல். |
அரித்து எரிக்கிற சுப்பிக்கு ஆயம் தீர்வை உண்டா? |
அரிய சரீரம் அந்தரத்தெறிந்த கல். |
அரியது செய்து எளியதுக்கு ஏமாந்து திரிகிறான். |
அரியுஞ் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயிலே மண்ணு. |