text
stringlengths 16
178
|
---|
அதிருஷ்டவான் மண்ணைத்தொட்டாலும் பொன்னாகும். |
அதிலே குறைச்சல் இல்லை ஆட்டடா மணியை பூசாரி. |
அதிலேயும் இது புதுமை, அவள் செத்தது மெத்த அருமை |
அதின் கையை எடுத்து அதின் கண்ணிலே குத்துகிறது |
அது அதற்கு ஓருகவலை, ஐயாவுக்கு எட்டுக்கவலை. |
அதுவும் போதாதென்று அழலாமா இனி? |
அதுக்கு இட்ட காக மினக்கெட்டு அரிவாள் மணைக்குச் சுறுக்கிட்டதா? |
அதெல்லாம் உண்டிட்டு வாவென்பாள் |
அதைக் கைகழுவ வேண்டியதுதான். |
அதை நான் செய்யாதேபோனால் என் மீசையை எடுத்துவிடுகிறேன் |
அதைரிய முள்ளவனை அஞ்சாத வீரன் என்றாற்போல. |
அதை விட்டாலும் கதியில்லை. அப்புறம் போனாலும் விதியில்லை |
அஸ்த செவ்வானம் அடைமழைக்கு லக்ஷணம். |
அத்தம் மிகுதி அல்லவோ அம்பட்டன் பெண்கேட்க வந்தது. |
அத்தனையும் நேர்ந்தான் உப்பிட மறந்தாள். |
அத்தான் செத்தால் மயிராச்சு, கம்பளி மெத்தை நமக்காச்சு. |
அத்திக் காயைப் பிட்டுப் பார்த்தால் அங்கும் இங்கும் பொள்ளல். |
அஸ்தி சகாந்தரம் என்கிறது போலிருக்கிறது. |
அத்தி பூத்தாற் போல் (இருக்கிறது). |
அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு. |
அத்திப் பூவை ஆர் அறிவார்கள். |
அத்திப் பூவைக் கண்டவர்கள் உண்டா, ஆந்தைக் |
குஞ்சைப் பார்த்தவர்கள் உண்டா? |
அத்தி மரத்திலே தொத்திய கனி போல. |
அஸ்தியிலே ஜ்வரம். |
அத்து மீறிப் போனான், பித்துக் கொள்ளி ஆனான். |
அத்தைக்கு மீசை முளைத்தால் சிற்றப்ப என்கலாம். |
அத்தைக் கொழியப் பித்தைக் கில்லை ஒளவையாரிட்ட சாபத் தீடு. |
அத்தைத்தான் சொல்வானேன் வாயைத்தான் வலிப்பானேன் (நோவானேன்)? |
அத்தை மகள் அம்மான் மகள் சொந்தம் போல. |
அத்தை மகளானாலுஞ் சும்மா வருமா? |
அத்தோடே நிண்ணுது அலைச்சல், கொட்டோடே நிண்ணுது குலைச்சல். |
அந்த ஊர் மண் மிதிக்கவே தன்னை மறந்து விட்டான். |
அந்தணர்க்குத் துணை வேதம். |
அந்தணர் மனையிற் சந்தனம் மணக்கும். |
அந்தப் பருப்பு இங்கே வேகாது. |
அந்தம் சிந்தி அழகு ஒழுகுகிறது. |
அந்தரத்தில் கோல் எறிந்த அந்தகனைப் போல. |
அந்தலை கெட்டுச் சிந்தலை மாறிக் இடக்கு. |
அந்த வெட்க்க்கேட்டை (வெட்கத்தை) ஆரோடே சொல்லுகிறது? |
அந்தி ஈசல் பூத்தால் அடைமழை அதிகரிக்கும். |
அந்திப் பீ சந்திப் மீ பேலாதான் வாழ்க்கை சாமப் பீ தட்டி எழுப்பும். |
அந்திமழை அழுதாலும் விடாது. |
அந்துக்கண்ணிக்கு அழுதாலும் வாரானாம் ஆமுடையான். |
அந்தாது நெல்லானேன். |
அபத்த பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழியும் தியாச்சியம். |
அப்பச்சி குதம்பையைச் சூப்பப் பிள்ளை முற்றின தேங்காய்க்கு அழுகிறது போல. |
அப்பச்சி கோவணத்தைப் பருந்துகொண்டோடுகிறது, பிள்ளை வீரவாளிப் பட்டுக்கு அழுகிறது. |
அப்பத்தை எப்படிச் சுட்டாளோ, தித்திப்பை எப்படி நுழைத்தாளோ? |
அப்பம் என்றாற் பிட்டுக் காட்ட வேண்டுமா? |
அப்பம் சுட்டது சட்டியில், அவல் இடித்தது திட்டையில். |
அப்பம் சுட்டது திட்டையிலே, அவல் இடித்தது சட்டியிலே. |
அப்பனோடே போகிறவளுக்கு அண்ணன் ஏது தம்பி ஏது? |
அப்பன் அருமை அப்பன் மாண்டால் தெரியும், உப்பின் அருமை உப்பு இல்லாவிட்டால் தெரியும். |
அப்பன் செத்தும் தம்பிக் கழுகிறதா? |
அப்பன் சோற்றுக் கழுகிறான், பின்ளை கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான். |
அப்பன் பெரியவன், சிற்றப்பா, சுருட்டுக்கு நெருப்புக் கொண்டுவா. |
அப்பன் அப்பா என்றால் ரங்கா ரங்கா என்பான். |
அப்பா என்றால் உச்சி குளிருமா? |
அப்பாஜி உப்பில்லை. |
அப்பிடாவு மில்லை வெட்டுக் கத்தியு மில்லை. |
அப்பியாசம் குலவிருது. |
அப்பியாசம் கூசாவித்தை. |
அப்பியாச வித்தைக்கு அழிவில்லை. |
அமரபட்சம் பூர்வபட்சம், கிருஷ்ண பட்சம் சுக்கிலபட்சம். |
அமரிக்கை ஆயிரம் பெறும். |
அமர்த்தனுக்கும் காணிவேண்டாம் சமர்த்தனுக்கும் காணிவேண்டாம். |
அமாவாசைக் கருக்கலிலே பெருச்சாளி போனதெல்லாம் வழி. |
அமாவாசைச் சோறு சும்மா அகப்படுமா? |
அமாவாசைப் பருக்கை என்றைக்கும் அகப்படுமா? |
அமிஞ்சி உண்டோ, குப்புநாயக்கரே. |
அமிஞ்சிக்கு உழுதால் சரியாய் விளையுமா? |
அமுக்கொற் போலிருந்து அரணை அழிப்பான். |
அமுதம் உண்கிற வாயால் விஷம் உண்பார்களா? |
அமுதுபடி பூச்சியம், ஆடம்பரம் அதிகம். |
அமைச்சனில்லாத அரசும், ஆமுடையானில்லாத ஆரிழையும். |
அம்பட்டக் கிருதும், வண்ணார ஓயிலும். |
அம்பட்டனை மந்திரித் தனத்துக்கு வைத்துக் கொண்டதுபோல. |
அம்பட்டன் குப்பையைக் கிளறினால் மயிர் மயிராய்ப் புறப்படும். |
அம்பட்டன் கைக் கண்ணாடி போல |
அம்பட்டன் பல்லக் கேறினது போல. |
அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் அருமையா? |
அம்பட்டன் மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கினது போல |
அம்பலக் கழுதை அம்பலத்திற் கிடந்தாலென்ன, அடுத்த திருமாளிகையிற் (திருமாளத்திற்) கிடந்தாலென்ன? |
அம்பலத்தில் ஏறும் பேச்சை அடக்கம் பண்ணப் பார்க்கிறான். |
அம்பலத்தில் கட்டுச் சோறு அவிழ்த்தாற் போல. |
அம்பலத்தில் பொதி அவிழ்க்கலாகாது. |
அம்பலம் வேகுது. |
அம்பாத்தூர் வேளாண்மை யானைகட்டத் தான் வானமட்டும் போர், ஆறுகொண்டது பாதி தூறு கொண்டது பாதி. |
அம்பாணி தைத்தது போலப் பேசுறான். |
அம்பா பாக்கியம் சம்பா விளைந்தது, பாவிபாக்கியம் பதராய் விளைந்தது. |
அம்பிகொண்டு ஆறுகடப்போர் நம்பிக்கொண்டு நரிவால் கொள்ளுவார்களா? |
அம்மண தேசத்தில் கோவணங் கட்டினவன் பைத்தியக்காரன். |
அம்மணமும் இன்னலும் ஆயுசுபரியந்தமா? |
அம்மா குதிர்போல, ஐயா கதிர் போல. |
அம்ம கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா? |
அம்மா தெருளுவதற்கு முன்னே ஐயா உருளுவார். |
அம்மாளுக்குத் தமிழ் தெரியாது, ஐயாவுக்கு வடுகு தெரியாது. |
அம்மானும் மருமகனும் ஒரு வீட்டுக்கு ஆள் அடிமை. |
அம்மான் மகளுக்கு முறையா? |